பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு தமிழ்த் தென்றல் திரு.வி.க. முதல் நாவலர் பாரதியார், தந்தை பெரியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானந்தம், சிலம்புச்செல்வர் ம.பொ.சி. ஆகியோரைக் கொண்ட சிறப்புப் பேச்சாளர்கள் பதின்மரின் பட்டியலில் செந்தமிழ் நலந் துலங்கப் பேசும் சிறந்த பேச்சாளர்களென்று சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களையும், உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களையும், சிறந்த பேச்சாளர்கள் (1947) என்னும் நூலில் நூலாசிரியர் எழுத்துச் செம்மல் {_s)/T.Jr. சம்பந்தன் சுட்டிக்காட்டியது குறிப்பிடத் தக்கது. - இலக்கிய மாமணி பி.வி. கிரி 安 ok * 女 安 உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களின் அரும்பெரும் புலமைத்திறத்தை அளவிட்டு உரைக்க முடியாது. அரிய உரை நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்ட பெரியவாச்சான் பிள்ளையை வைணவ உல்கம் உரைவேந்தர் என்று போற்றியதோடு நான்கு அரியணைகளை அவர்களுக்கு வழங்கியது என்பார்கள். திவ்யப்பிரபந்தத்திற்கு உரை வகுத்த நிலையில் முதல் அரியணை என்றும், இராமாயண மகாபாரத உண்மைகளை விரிவுரை செய்ததற்கு ரண்டாவது அரியணையும் வைணவ மறைக்குப் பொருள் விவரித்து எழுதிய விளக்கங்களுக்கு மூன்றாவது அரியணையும் ஆளவந்தார், எம்பெருமான் போன்ற ஞானசிரியர்களின் நூல்களுக்கு அருளிய பேருர்ைக்கு நான்காவது அரியணை என்றும் நான்கு அரியணைகளை வழங்கி அவரை அரியணை மேல் ஏற்றி. உரைவேந்தர், வியாக்கியான சக்கரவர்த்தி என்று வைணவ உலகம் பாராட்டியது. அந்த வகையில் சங்க இலக்கியங்களுக்கு உரை கண்டதற்கு ஒர் அரியணையும். சைவ சித்தாந்த நூல்களுக்கு உரை விளக்கம் வழங்கியதற்கு இரண்டாம் அரியணையும் சமுதாய வரலாற்றுக் கல்வெட்டுப் பொருண்மைகளுக்கு விளக்கம் கூறியதற்கு மூன்றாம் அரியணையும், சன்மார்க்க ஞான வேதமாகிய திருவருட்பாவுக்குப் பேருரை எழுதியத்ற்கு நான்காவது அரியணையும் என நான்கு அரியணையில் ஏற்றி, உரைவேந்தர். பேருரை விளக்கப் பெரும்புலவர் என்று தமிழ் உலகம் பெரியவாச்சான் பிள்ளையை வைணவ உலகம் போற்றியது போலவே ஒளவை அவர்களையும் நாம் போற்றலாம். பொறியாளர் திலகம் கெ. பக்தவத்சலம் செயலர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்