பக்கம்:உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



புகழ்ப்பொலிவேடு!

7


தம் ஆசிரியர் கரந்தைக் கவியரசு அவர்கள் விரும்பியபடி புலவர் ஒளவை துரைசாமிப் பிள்ளையவர்கள் புத்த சமயக் கோட்பாடு களையும் தருக்க நூல்களையும் ஆழக் கற்றுத் தெளிந்து இறுதிக் காதைகள் நான்கிற்கும் விளக்கவுரை எழுதித் தம் ஆசிரியர்க்குப் புகழ் ஈட்டிக் கொடுத்தனர். 1944 சூலைத் திங்கள் 11ஆம் நாள் புலவர் ஒளவை அவர்கள் எழுதிய கடிதத்தில், "அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ, எம்.எல். அவர்கள் நோயுற்று உடல் நலிவால் பணியினின்று 1-7-1944-இல் விலக வேண்டியதாயிற்று. அவர்கட்குச் சிறிது நேரம் பேசவோ எழுதவோ நடக்கவோ முடியாது. கைநடுக்கம் மிகுதியாய் விட்டது. அவரைக் காணுந்தோறும் கவலை பெரிதாகிறது. அவர்கள் தாம் இப்போதிருக்கும் நிலையில், எங்கே போவது? எவ்வாறு வாழ்வது? என்ற கவலையில் செய்தவறியாது திகைத்த வண்ணம் இருக்கின்றார். சிதம்பரத்தை விட்டுப் போவதற்கே உடல் இடந்தருமோ என்ற கவலையும் அச்சமும் அடைகின்றார்” என்றும், இன்னும் இவை போன்ற மனவருத்தந் தரத்தக்க தொடர்களையும் குறிப்பிட்டு, "இவற்றிற்குத் தங்கள் அன்பான பதில் எதிர்பார்க்கிறேன்.” என்று முடித்திருந்தார். அக்கடிதம் எனது நெஞ்சத்தை நீராய் உருக்குவதாயிற்று. பேராசிரியர் எம்.எல். பிள்ளையவர்கள் உடல் நலிவுற்று ஆதரவற்ற நிலையில் இருப்பது தெரிந்தவுடன் அப்போது கழகத் தலைவராகவும், பெரியார் ஈ.வெ.ரா, அவர்கள் மதிப்புக்குரியராகவுமிருந்த உயர்திரு ப. சிதம்பரம் பிள்ளை (பி.ஏ., பி.எல்.) அவர்களிடம் சொல்லவே, அவர்கள் 'நீர் பிள்ளையவர்கட்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டுமென்று கருதுகிறீரோ அத்தனைக்கும் யான் ஒப்பம் போடுகிறேன்' என்று ஊக்கவுரை அளித்தனர். உடனே, புலவர் ஒளவை அவர்கட்குத் திரு எம்.எல். பிள்ளை அவர்களைப் புகை வண்டியில் முதல் வகுப்பில் ஏற்றித் துணையோடு நெல்லைக்கு அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதியதோடு தந்தியுங் கொடுத்தேன். அதன்படி திரு. பிள்ளையவர்கள் துணையோடு நெல்லைக்கு அவர் அனுப்பி வைக்கப்பெற்றனர். புலவரவர்கள் திரு. பிள்ளையவர்களுக்கு இவ்வகையில் காலத்தினாற் செய்த உதவி என்றும் மறக்கற்பாலதன்று. இனி, புலவர் ஒளவையவர்கள் கழக விழாக்களில் கலந்தும் செந்தமிழ்ச் செல்வி இதழாசிரியர் குழுவில் ஒர் உறுப்பினராக