பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது 'தொன்றியல் மருங்கின் என்றதனுல், இகரம் உகரமாதல் எய்திற்று. அஃதென்னும் சுட்டு, செய்யுளாதலின், முற்பட வந்தது. வேண்டிய குறிப்பின' பென்புழி வேண்டல் தலைமகன், பரத்தை என்ற இருவர்பாலும் கின்ற விழைவு. தோற்றுவித்து, அவன் அவள் குறிப்பினனுகற் கேதுவுமாக லின், ஆக்கம் வத்தது. அருளாதென்னும் எதிர்மறைவின யெச்சம் உறைதல் என்னும் வினேப்பெயரின் வின் கொண் டது. ஈண்டு, ஆண்டு என்பன முறையே தலம்கன்மனை யும், பரத்தைமனையும் சுட்டி கின்றன. - - மனக்கண் வருதலைக் கருகிய தலைமகனே அவ்வாறு வாராவகைப் பாத்தை விலக்கியது தானறிந்தமை தோன்ற், நின்மார்பு நயந்த கன்னுதலரிவை யென்றும், "அவள் விலக்க விலங்கி வருதல்தவிர்ந்த ,ே இன்று, சண்டுப் போந்தது, உலகியல் பற்றியல்லது, இவளே அருளும் குறிப்புப்பற்றி யன்று” என்பாள், வேண்டிய குறிப்பினை யாகி யென்றும், "அக் குறிப்பினுல் இதுபோது செய்யும் தலையளிதானும் அவளது குறிப்புவழிப்பட்டதே பன்றிப் பிறிதின்மையின், அவள் மனேக்கண்ணே தங்குதலே கினக்கு இன்பமாவது” என்பாள், ஈண்டு நீ யருளா தாண்டுறைதல் என்றும், அது செய்தலால் கினக்கும் கின் பசத்தைக்குமே இனிதாம் எனக்கருதற்க, சின்னின்யாம் வேறல்லேமாய், நீ பெய்துவனவெல்லாம் எய்தகிற்கின்றே மென்பாள் நினக்கேயன்றல் தெமக்கு மாரினிதே என்றும் கூறினுள். “எமக்கு மாரினிதே' என்பது குறிப்பு மொழி. நீ மனேக்கண் வருதலைப்பேணுது, கின்பரத்தை விலக்க விலங்கிப் பின் அவள் குறிப்பினேயாகி வருதல் எமக்கு நானுத்தருமாகலின், ஆண்டு உறைதலே தக்கது எனப் புலத்து கூறுகின்ருளாகலின், இது, "பேணுவொழுக்கம் நாணிய பொருளின்கண்' (பொ. 150) தோழி கூறுவதன் பாற்படும். மெய்ப்பாடும் பயனுமவை. .