பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 ஐங்குறுநூறு மூலமும் (முதலா வத யிருணிற மையான், வருமிட றியாத்த பகுவாய்த் தெண்மணி, புலம்புகொள் யாமத்து இயங்குதொ றிசைக்கும்" (279) எ ன வ ரு ம் குறுந்தொகைப் பாட்டாலும் அறியப்படு கிறது. தொழில் முடிந்தவழி, இவற்றைக் கழனிகளில் மேயவிட்டு, நீர்நிலைகளிற் கிடப்பித்தல் பண்டும் இன்றும் உள்ள செயல். மென்புலத்தை உழுத உழவர், எருமைகளை வன்புலத்து மேயவிடுவர் எனப் புறப்பாட்டு (395) ஒன்று கூறுகின்றது. 91. நெறிமருப் பெருமை நீல விரும்போத்து வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங் கழனி யூரன் மகளிவள் பழன வெதிரின் கொடிப்பினை பலளே குறைவேண்டிப் பின்னின் வந்த தலமசற்குத் தோழி, 'இவள் இளேயள், விளைவிலள்' எனச் சேட்படுத்தது." ப. ரை- நாற்றம் கொள்ளப்படாத கரும்பின் ஆவார் செய்யப் பட்ட நெடிய மாலேயை யுடையன் என்பதற்ை. பேதை என்றவாறு அதிக எருடிைப்போத்து வெரிமலர்ப் பொய்கை யாழ்பல் மயக்கும் ஊர் என்றது, நல்ல தன்மையை

  • சேட்படுத்தல் என்பது சேட்படை யெனவும் வழக்கும். அஃதாவது, தலைமகளைக் குறைநயப்பித்துத் தன்னியை கூட்ட்ங் கூட்டலுறும் கோழி, தலைமகளது பெருமையும், தனது முயற்சி பருமையும் தோன்றுதல் காரணமாகவும், இத்துணை யருமையுடை யாள் இனி நமக்கு எய்துதற் கருமையுடையள் என இதுவே புணர்ச்சி யாக நீட்டியாது வரைந்துகோடல் காானமாகவும் தலைமகனுக்கு இயைய மறுத்துக் கூருகிற்றல் என்பர் ஆசிரியர், பேராசிரியர். 'சேண் என்பது அகற்றல் பட வென்பது நிகழ்தல்; நிறுத்த லென் பது கழி இக்கோடல்: காப்பு மிகுதி சொல்லி அகற்றிக் கழிஇக்கோ டல் என்றவாறு என்பர் இறையனுர் அகப்பொருள் உரைகாரர்.