பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் - 277 ப. ரை :-மகளிரது மறைந்த இழையை எருடிை கிரேக்கு மூரன் டிகளென்றது, இப்போது வாயில் கேர்த்லேயன்றிக் களவுக்காலத்து .ே செய்த கன்மை மறைந்தனவும் எடுத்துக் கூறின ளென்பதாம். பு: ரை:-புனலின்கண் ஆடிய மகளிர் களைந்து வைத்த இழைகள் மணற்கண் மறைந்தவற்றை, அம்மணற்குன்றின் மேனின்று எருமைகள் தம் கோட்டினுலும் குளம்பிஞ்லும் கிளைத்து வெளிப்படுக்கும் புதுவருவாயினையுடைய ஆான் மகளாகிய இவள், பாணரது யாழ் காம்பின் இசையினும் இனிய சொற்களையுடையளாவாள் Tெ. ஆறு. - புனலாடு மகளிர், தாம் நீராடத் தொடங்குமுன், தமது இழைகளுட் சிலவற்றைக் கழற்றி வைத்துவிட்டு, விளையாடு வது இயல் பாகலின், புனலாடு மகளிர் இட்ட இழையினைக் கூறினர். காற்று வீசுதலால், அவ்விழைகள் மணற்றுகளிற் புதைந்து மறைந்து மேடாதல் தோன்ற, மண்லாடு சிமையம் கூறப்பட்டது. மணலாடு சிமையம், மணலால் உண்டாகும் மேடு, சேற்றிற் படித்து கிடந்து அயர்வு போக்கி மதர்த்து வரும் எருமையினம் மனன்மேடுகளைக் கோடுக ளாலும், குளம்புகளாலும் குத்தித் துழாவுதல் இக்காலத்தும் காணப் படுவதோர் காட்சியே. இச்செய்கைகளால் மணற்றுகள்களில் மறைந்த ஒள்ளிழை வெளிப்படுதலால், இதனே, எருமை ஒள்ளிழைகளைக் கிளைக்கும் என்ருர். நரம்பு ஆகுபெயர். கிளவி, சொல். - தலைமகன் புறத்தொழுகிப் போத்தான் வாயில்வேண்டி விடுத்தவழி, அவற்கு வாயில் தேர்விக்கும் கருத்தால், தோழி அது நேர்தலை விரும்பாதாள்போலத் தலைவனே இயற்பழிப்ப, அது பொருத தலைவி இயற்பட மொழிந்த திறம் கூறுவாள், பாணர் நரம்பினும் இன்கிளவியளே என்ருள். எனவே, பாணர் யாழிற் றம் தலைவன் புகழ்பாடுதல்போல, இவள் கினது இயலே எடுத்து இனிமையுற்க் கூறினுள் என்ருளாம்.