பக்கம்:கல்வி எனும் கண்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

கல்வி எனும் கண்


நடத்தவும் தயாராக உள்ளது. எனினும் மக்க்ள் ஆர்வம் காட்டவில்லை என்கின்றனர். இளம்பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளிலேயே அந்த நிலை என அறிகிறோம் பகல் உணவும் பாலும் பழமும் பிறவும் அளிக்கின்ற காரணத்தால் தான் பள்ளியில் தற்போது அதிகமான பிள்ளைகள் பயில்கிறார்கள் என்று அரசாங்கமே தகவல் தருகின்றதே. இந்த நிலை எல்லாம் போக்க வழி இல்லையா! மருந்தில்லையா அரசாங்க முனைப்பு போதாதா! பணியாளர் முயற்சி பற்றாக்குறையில் அமைகின்றதா? தெரியவில்லையே.

1981 மக்கள் கணக்குப்படி நம் நாட்டில் பயிலாத ஆண்கள் 53% ஆகவும் பெண்கள் 75% இருந்தனர். இப்போதோ இந்த நூற்றாண்டின் இறுதியிலோ நான் மேலே காட்டியபடி, உலகக் கல்லாதார் எண்ணிக்கையில் பாதி இந்தியாவில் இருக்கும் என்கின்றனர். இதற்குக் காரணம் மக்கள் இதில் போதிய கவனம் செலுத்தாமையேதான். நாட்டில் ஒன்றும் கல்லாதவன்-கைத்தொழில் வினைஞன் ஒரு நாளைக்கு 50, 60 என்றும் அதற்கு மேலும் சம்பாதிக்கிறான். பெண்களும் அப்படியே இருபத்தைந்து, முப்பது என நாள்தோறும் சம்பாதிக்கின்றனர். இளம்பிள்ளைகளும் கூட 15 வயதில்-இன்னும் 10 வயதில் கூட 10 அல்லது 15, 20 வரை நாட்கூலி பெறுகின்றனர். இவற்றைச் சேமித்து வாழ்க்கையினைச் செம்மைப்படுத்துகிறார்களா என்பது வேறு. ஆனால் இவ்வாறு பெறும் வருவாயினை விடுத்து, படிக்க வருவது கடினம். ‘படித்தால் என்ன இதைவிட அதிகமாக வரப் போகிறதா?’ என்ற கேள்வி அவர்கள் உள்ளத்தில் எழுகின்றது. மேலும் பலர் மாலை வேளைகளில் குடிக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையாகின்றனர். பெண்கள் வீட்டு வேலைக்கு உட்படுகின்றனர். இரவிலோ அன்றி விடியற் காலையிலோ சமையல் செய்து, உண்டு. வேலைக்குப் போகும் போதும் மதிய உணவுக்காக உடன் எடுத்துச் சென்றால்தானே நாள் முழுதும் உழைக்க முடியும். இந்த நிலையில் அவர்கள் படிப்பதெங்கே? பிள்ளைகள்