பக்கம்:கல்வி எனும் கண்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழிற் கல்வி

121


திட்டத்தில் இடம் பெற்றிருந்தமை நினைவுக்கு வருகிறது. பத்தாம் வகுப்பு அன்றி, அன்றைய பதினோராம் வகுப்பு வரையில் பயிலும் மாணவன். ஏதேனும் ஒரு தொழிலைக் கல்வியுடன் கற்க வேண்டும் என்பது கட்டளை-முறை. எனினும் கட்டாயம் இல்லையாதலால் பல பள்ளிகள் இவற்றை ஏற்று நடத்தவில்லை. நம் நாட்டில் அன்றும் இன்றும் எதுவும் கட்டாயமாக்கினால்தான் நடக்கும்போலும். எனினும் மேலே 11ஆம் வகுப்புகளில் தட்டெழுத்து போன்றவை தொழில் அமைப்பில் இடம்பெற, பள்ளி இறுதித் தேர்வில் அவையும் பாடமாக ஏற்கப்பெற்றுப் போற்றப்பட்டன. எனவே அந்தியர் ஆட்சி இருந்த அந்த நாளிலேயே பள்ளியில் பயிலும் மாணவர் ஏட்டுக் கல்வியுடன் நாட்டுக்குப் பயன்படும் தொழிற்கல்வி ஒன்றினைக் முறையாகப் பயில வழிவகை இருந்தது. ஆனால் உரிமை பெற்றபின் அந்த நிலை இல்லை என அறிகிறேன். பெரும்பாலும் 6 முதல் 11வது வரையில் பயிலுபவர் இத்தகைய தொழில் ஒன்றினைக் கற்றுக்கொண்டால், அவர் பள்ளிப்படிப்பு முடிந்ததும் வேலை தேடி அலையாம்ல் வீட்டிலேயே ஏதேனும் தொழில் செய்து வாழ வழி இருந்தது இந்த மரபு ஏனோ உரிமை பெற்ற பாரதத்தில் ஒதுக்கப் பெற்றது? -

இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் தொழில் கல்வியினைச் சாதி அடிப்படையில் சார்த்தி அவனவன் தன்தன் சாதிக்கமைத்த தொழிலைக் கற்கவேண்டும் என்று விதி அமைத்தார் என்றும் இதனாலேயே அது பல பெரிய எதிர்ப்புக்களிடையே எடுபடாமல் விடுபட்டுப் போயிற்று என்றும் கூறுவர். பள்ளிகளில் பல தொழில்களை அமைத்து, வேண்டியவர் வேண்டிய தொழிலைப் பயிலலாம் என விதித்து, அவற்றிற்குத் தேர்வும் நடத்திச் சான்றிதழ் தர ஏற்பாடு செய்திருப்பாராயின் அத்தொழில்முறை ஓரளவு நாட்டில் வளர்ந்திருக்கும். ‘வருணாசிரம’ மரபு என அது ஒதுக்கப்பட்டது என அறிகிறேன்.

க.-8