பக்கம்:கல்வி எனும் கண்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

கல்வி எனும் கண்


தொடங்கி 12 அல்லது 1 மணிக்குள் முடிந்துவிடும். காலை 8 மணிக்குச் சூரியனைக் காணாத அந்த நாடுகளிலெல்லாம் அவ்வாறு விடியலில் பள்ளிகள் நடக்கும்போது, நம்நாட்டில் மட்டும் பத்துக்கு என வைத்து, நன்கு உண்டபிறகு, உறங்கும் நிலையில் பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்புகிறோம். சென்னை போன்ற நகரங்கள் தாய், தந்தையர் இருவரும் வேலைக்குப் போவதால் பெரும்பாலும் அவர்கள்பணி 10க்குத் தொடங்குவதால் குழந்தைகளை அப்படியே பள்ளியில் விட்டு வேலைக்குச் செல்ல செளகரியமாகும் என நினைக்கின்றனர். நல்லவேளையாக, பஸ் நெருக்கடி காரணமாகச் சென்ற ஆண்டு காலை 8.30க்குப் பள்ளிகள் தொடங்க முடிவு செய்து இன்று நடைமுறையில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நடைபெறுதல் நல்லது. .

‘வெள்ளி முளைக்கப் பள்ளிக்கும் வாரும்’ என்று விநாயகர் வழிபாட்டில் ஓரடி வருகிறது. அப்படி விடியற்காலையில் சென்று. விளக்கின்றேனும் முறையம் சொல்லும் வகையில், பல இலக்கியங்களை, வாய்பாடுகளை முறையாக ஆசிரியரோ, மற்றைய அறிந்த மாணவரோ சொல்ல, மற்றவர்கள் சொல்லுவார்கள். பின் பொழுது விடிய; அவரவர் வீட்டிற்குச் சென்று, ஒன்பது மணி அளவில் வந்து பாடங்களைப் பயில்வர். இந்த ‘முறையம்’ சொல்லும் வகையில் கீழ்வாய் இலக்கம், முதலிய கணக்குக்குரிய வாய்பாடுகள் மனப்பாடமாகின்றமையால் இன்றைய (Clerk Table) கிளார்க்டேபில் போன்றவை இல்லாமலே எத்தகைய. பின்ன கணக்குகளையும் பிறவற்றையும் மனத்தாலேயே போட்டு முடிவு எடுப்பர். அப்படியே நிகண்டு முதலியன படிப்பதால், அகராதி இன்றியே எல்லா இலக்கியங்களுக்கும் உரை காண்பர். நல்ல இலக்கியங்கள் மனப்பாடம் ஆவதால் அவர்தம் பேச்சும் எழுத்தும் சிறந்து விளங்கும். இளமையில் என் கிராமத்தில், அக்காலத்தில் (1918-24) இவ்வாறு பயின்றமை இன்றும் நினைவுக்கு வருகிறது. ஆயினும் இந்த முறை இன்று நடைபெறாது. அதுபோன்று விடியலில் எழுந்து சொல்லித்தரும்