பக்கம்:கல்வி எனும் கண்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கல்வி எனும் கண்


(அப்போது உயர்நிலைப் பள்ளிக்குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்),

தனியார் வசம் ஒப்புவித்தால் சிலசமயங்களில் தவறு உண்டாகிறது என்பார் கூற்று காதில் விழுகின்றது. வேண்டியவர்கள்-அல்லது கையூட்டு அதிகமாகத் தருகின்றவர்கள் அல்லது மேலிடத்து ‘சிபாரிசு’ பெற்றவர்கள் பாடநூல்களை -அவை பிழைபட்டனவாயினும் வெளியிட ஒப்புதல் தருவதும், அத்தகைய நூல்களை அப்படியே கையூட்டு முதலியன பெற்று பள்ளிக்கூடங்களில் வைக்கப்பெறுவதும் உண்டு என்றும் சிலர் கூறுகின்றனர். நாமும் அவர்தம் கூற்றினையும் நூற்றுக்கு நூறுபொய் என்று தள்ளவும் முடியாது. பல்கலைகழகப் பாடநூல் குழுவினர் இந்த வகையில் செயல்படுகின்றனர் என்ற பேச்சு அடிக்கடி காதில் விழுகிறது. இந்த ஆண்டு ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்ப்பகுதி நீக்கப்பெற்று வேறு அமைக்க ஏற்பாடு செய்யப்பெற்றதை நாளிதழ்கள் வெளியிட்டன. எனவே குறை எதிலும் இல்லாமல் இல்லை. எனினும் பலவற்றுள் சிலவற்றைத் தெரிந்தெடுத்து நல்லன செய்து வழிகாண வேண்டுவது அரசாங்கத்தின் கடமையாகும்-இன்றியமையாததுமாகும்.

பெரும்பாலும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிப்பாடங்களைத் தொகுக்கும் பொறுப்பினைக் கல்லூரி ஆசிரியர்களிடம் விடுகின்றது. இது எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று. கல்லூரியில் ஆசிரியப் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் கொள்வோர் கொள்கை அறிந்து, இளம் உள்ளங்கள் அறிந்து பாடங்களை அமைக்க இயலாது என்பது பலர் கருத்து. மத்திய பள்ளிகளில் 10,12 ஆகிய தேர்வு எழுதும் வகுப்புகள் தவிர்த்து முற்றைய அனைத்து வகுப்புகளுக்கும் தனியார் பாடநூல்கள் உள்ளன-தரமாக உள்ளன. எனவே பயில்பவர் சிறக்க வருகின்றனர் என்ற நிலையும் உண்டாகிறது. இதை மாற்றுவதில் தவறு இல்லை. அறிவியல் போன்ற பாடங்களை