பக்கம்:கல்வி எனும் கண்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி எனும் கண்

25


வேண்டுமாயின் அத்தகைய உயர்நிலையில் உள்ளவர் இரண்டொருவர் துணைகொண்டு வெளியிடலாம். ஆனால் மொழிப்பாடங்கள் போன்றவை பயிற்றுபவர்களில் அனுபவம் முதிர்ந்தவர்களைக் கொண்டு தொகுக்கப்பெறின் பயன் விளையும்.

அண்மையில் மத்திய அரசாங்கம் கரும்பலகைத் திட்டம் என்ற ஒரு திட்டத்தில் ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் கோடிக்கணக்கில் வாரிவழங்கியது. தமிழ்நாட்டில் அந்தத் தொகையினைத் தக்க வகையில்-அக்குழந்தைகளுக்குப் பயன்படும் வகையில் நூல்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சான்றுகள் காட்டிச் சில இதழ்கள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதை மறுத்து அரசாங்கமோ அந்த நூல்களுக்கு உரியவர்களோ எந்த மறுப்பும் வெளியிடாத காரணத்தால் அக்குற்றச்சாட்டுகள் உண்மை என்று கொள்ளத்தானே வேண்டி உள்ளது. எனவே இத்தகைய குறைபாடுகள் இல்லாவகையில் மாணவர்தம் எதிர்கால வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் நல்ல பாட நூல்களை வெளிக்கொணர முயலவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு வகுப்பிற்கும் அமைக்கும் பாடங்களைப் பற்றியும் பிறவற்றைப் பற்றியும் அந்தந்தத் துறைகளைத் தனியாகக் காணும்போது விளக்கலாம் என எண்ணுகிறேன்.

தாய்மொழியிலேயே கல்வி அமையவேண்டும் என்று விடுதலைக்கு முன்பே மக்கள் கிளர்ந்தெழுந்தனர். இராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் எல்லாப் பாடங்களுக்கும் நல்ல தமிழ்ச்சொற்களைக் கண்டு தனித்தனி (ஒவ்வொரு பாடத்திற்கும்) அகராதி நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழில் எழுதுவோர்க்கு ஊக்கம் அளித்தார் இராஜாஜி. அதற்குப் பிறகும் ஒருமுறை இந்த வகையில் எல்லாப் பாடங் களுக்கும் தனித்தனி அகராதிகள் வந்தன. மத்திய அரசும் ஒரு மொழிக்கு ஒரு கோடி அளவில் அவ்வம் மொழியில் பாட

க—2