பக்கம்:கல்வி எனும் கண்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கல்வி எனும் கண்


நூல்கள் வெளியிடுவதற்கென மானியமாகத் தந்து ஊக்கியது. பிற மாநிலங்களெல்லாம் அவற்றைச் செலவு செய்து நூல்கள் வெளியிட்டன. சில மாநிலங்கள் கொடுத்த மானியம் போதாது என்று மேலும் கேட்டன. ஆனால் தமிழகம் தனக்கென மானியமாகத் தந்ததில் பெருந்தொகையினைத் திரும்பத் தந்தது எனக் கூறக்கேட்டிருக்கிறேன். ‘தமிழ்’ ‘தமிழ்’ என்று மேடையில் பேசுவதே அன்றிச் செயலில் காட்டுவர் இலரே என வருந்தவேண்டியுள்ளது இன்று (I.A.S.) ஐ.ஏ.எஸ். முதலிய தேர்வுகளில் தமிழ்நாடு எங்கேயோ பின்தங்கிவிட்டது என அரசியல் தலைவர்களும் ஆள்வோரும் கூறுகின்றனர். ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த தமிழகம் இன்று கடை இடத்தில் வரக்காரண்ம் என்ன? பாடங்களை அவ்வம் மொழியில் பயிலலாம் என்ற நிலை மற்ற மாநிலங்களில் இருப்பதோடு ஐ.ஏ.எஸ். தேர்வினையும் அவரவர் தாய்மொழியில் எழுதலாம் என்ற விதியும் உள்ளது. வடநாட்டவரும் பிறரும் இந்தியிலும் பிற மொழிகளிலும் எழுதி அவ்வம் மொழி அறிந்தவராலேயே திருத்தப்பெற்று நல்ல இடங்களைப் பெறுகின்றனர். தமிழ் நாட்டிலிருந்து ஐ.ஏ.எஸ். எழுதுகின்றவர்கள் எத்தனை பேர் தமிழில் எழுதுகின்றனர்? யார் எண்ணிப் பார்ப்பவர்?

கால் நூற்றாண்டுக்கு முன் ஐ.ஏ.எஸ். தேர்விற்குத் தமிழில் ஒருதாள் அமைக்க விரும்பியபோது, நானும் திரு தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்களும் பாடத் திட்டம் வகுத்து ஒரு தாளை எழுத ஏற்பாடு செய்தோம். அவர்கள் முதல் இரண்டு ஆண்டுகளும் நான் பின் இரண்டு ஆண்டுகளும் தேர்வாளராக இருந்தோம். மிகக் குறைவாகவே -ஒரு சிலரே எழுத முன்வந்தனர். இன்றும் அந்தத் தாள் இருக்கிறது என எண்ணுகிறேன். (தமிழ் இலக்கிய வரலாறு-மொழி வரலாறு). அதை எழுதுபவர்கள் உளரோ இல்லையோ என்பது தெரியாது.

எனவே தமிழன் பேச்சினை விடுத்துத் தாய்மொழியில் கல்வியைக் கற்றுத் தெளிந்தாலன்றி, பாரத நாட்டுப் பிற