பக்கம்:கல்வி எனும் கண்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கல்வி எனும் கண்


பிள்ளையைச் சேர்க்கப்பாடுபட்டனர். இன்று கட்டுப்பாட்டுக்கு அடங்கா வகையில் அது பெருகி விட்டது. அவற்றை முறைப்படுத்துவதும் பெற்றோர்களைத் தெளிவுபடுத்துவதும் அரசாங்கத்தின் கடமையாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வகையில் 10ஆம் வகுப்பு வரையில் பலப்பல வகையில் பள்ளிகள் அமைந்துள்ளன. அரசாங்க இசைவு பெறாத குழந்தைகள் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் பெருகியுள்ளன. பின் ஆறு முதல் பத்து வரையிலும் எத்தனையோ வேறுபாடு! மானியம் பெறும் எஸ்.எஸ்.எல்.சி எனும் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், கீழ்த்திசைப் (Oriental) பள்ளிகள், மத்தியப் பள்ளிகள், தில்லி கிறிஸ்தவ சங்கம் நடத்தும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எனப் பலவகையில் பள்ளிகள் நடைபெறுகின்றன. முதலது அரசாங்க முழு மானியம் பெற்று நடைபெறுவது. ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளிலோ பாடத்திட்டம்-மொழித் திட்டம் மிகக் குறைவாக உள்ளது. கீழ்த்திசைப் பள்ளிகளும் அவ்வாறே. மத்தியப் பள்ளிகளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் ஆங்கிலத்தையே பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. சில மத்தியப் பள்ளிகளில் இந்தி பயிற்சி மொழியாக இருக்கலாம். இப்படித் தமிழ் நாட்டு இளஞ்சிறுவர்கள் பயில இடர்ப்படும் கல்வி நிலை தேவைதானா? அன்று ஆங்கிலேயன் ஆண்டகாலத்தில் ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், அம்மரபினரைச் சார்ந்த குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். இன்று அந்த மரபினர் தமிழ் மரபினரோடு ஒன்றிவிட்டனரே! மேலும் அப்பள்ளிகளில் 100க்கு 95க்கு மேல் மற்றவர்கள் தானே பயில்கின்றனர். ஆசிரியர்களும் அப்படியே. சிறுபான்மை கருதியோ வேறு காரணத்தாலோ அன்று ஆரம்பித்தாலும் அத்தகைய நிலை இன்று இல்லையே! சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் அனைத்தும் அந்த நிலையில் தானே உள்ளன. சிறுபான்மை நிலையங்களில் 100க்கு