பக்கம்:கல்வி எனும் கண்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பல்கலைக் கழகங்கள்

41


கழகங்களை ஒப்புநோக்கின் நாம் எங்கோ பின்நிலையில் இருக்கின்றோம் என்பதை அறியமுடியும். நம்நாட்டு அறிவியல் நுணுக்கங்களை விளக்கும் பண்டைய இலக்கியங்களுக்கு மேலை நாட்டுப் பல்கலைக்கழகங்கள் விளக்கம் தருகின்றன; போற்றுகின்றன. பாராட்டுகின்றன. அவைபற்றி, மேலும் மேலும் ஆராய்கிறார்கள். ஆனால் இங்கோ அவற்றைப் படிக்க வேண்டியவர்கள் கூடப் படிப்பதில்லை. அதன் பயன் என்ன என்று எண்ணிப்பார்ப்பதில்லை. நம் நாட்டு அறிவியல், பண்பாடு, கலை, நலத்துறை போன்ற பலவற்றை மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்கள் ஆராயும் போது, நாம் அவற்றைப் படிக்கவும் செய்யாது பாழாக நாட்களைக் கழிக்கின்றோம். இவற்றைத் தெளிவுபடுத்தி உலகுக்கு உணர்த்தவேண்டிய-வழங்கவேண்டிய பல்கலைக் கழகங்கள் எதை எதையோ எடுத்து ஆராய்கின்றன. தமிழ் நாட்டுப் பழமையான பல்கலைக்கழ்கத்தின் ஆய்வுப்பட்டங்களுக்கு எழுதப்பெற்ற கட்டுரைகளை ஒரு கண்ணோட்டம் கொண்டு நின்றால் அவற்றுள் எத்தனை சமுதாயத்துக்குப் பயன்படுவன என எண்ணத்தோன்றும். தமிழ்த்துறை ஒன்றினை மட்டும் நான் சுட்டிக்காட்டினேன். பிற துறைகளைப் பற்றி அவ்வத் துறையினர் நன்கு அறிவர். ஆனால் அதே வேளையில் வரலாற்றுப் பின்னணியில்-வாழ்வொடு தொடர்புடைய அறிவியல் ஆக்க அமைப்பில் நம் இலக்கியங்கள் எவ்வெவ்வாறு வளம்பெற்றுள்ளன என்பதுபற்றி அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஆராய்கின்றன. அவ்வந்நாட்டு அறிவியல் இலக்கியநெறி, சமுதாயநெறி, சமயநெறி போன்றவற்றோடு, பிறநாட்டு நல்லனவற்றை நாடி நலம் காணும் அப்பல்கலைக் கழகங்களைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம். சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று பாரதியின் பாடலைப் பாடி அவருக்கு நூற்றாண்டு விழாக் கொண்டாடி அமைந்துவிடுகிறோமே அன்றி அவர் சொல்வழியே செயலாற்ற நம் பல்கலைக்கழகங்கள் முயல்கின்றனவா? நாம் அவர்


க–3