பக்கம்:கல்வி எனும் கண்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேநிலை வகுப்பு (+2)

65


ஏற்பட்டால், கல்லூரியில் தேவையற்ற பாடங்களைப் படித்து, பின் “ஏன் படித்தோம்- அட், கெடுவா பல தொழிலும் இருக்கக் கல்வி அதிகமெனக் கற்றுவிட்டோம் அறிவிலாமல். என்று ஒரு புலவர் பாடியதை மறந்து விட்டோமே” என வருந்த வேண்டிய நிலை சமுதாயத்தில் உண்டாகாது.

சில ஆண்டுகளுக்குமுன் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஒருவருடன் அவர் வீட்டு முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது கிராமத்தில் இருந்து வந்த ஒருவர் அவர் பாதங்களில் நெடுங்கிடையாக வீழ்ந்து புலம்பினார். எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவரைச் சமாதானம் செய்து, எழச் செய்து, என்ன வேண்டுமென்று கேட்போம். அவர் ஐயா, என் மகன் பி.ஏ வெற்றி பெற்றுவிட்டான். அதற்கு மேல் ஏதோ இரண்டு வருடப் படிப்பு இருகிறதாமே (அதன் பெயர் கூடத் தெரியவில்லை) அதை என் மகனுக்குத் தரவேண்டும் எனக் கூறி மறுபடியும் தண்டனிட்டார். நான் அவரைத் தடுத்து நிறுத்த, அவர் 'உன் பையனை எங்காவது வேலைக்கு அனுப்பக் கூடாதா? நீ தாழ்த்தப்பட்ட வகுப்பினராகக் காண்கின்றாய். மிகவும் முயன்றால் வேலை கிடைக்குமே என்றார். (அக்காலத்தில் எம். ஏ. எம். எஸ்சி. போன்ற முதுநிலைப் பட்டங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பல்கலைக் கழகத்தினிடமிருந்தது. எனவேதான் அவர் துணை வேந்தரையே பிடித்தார்) உடனே அவர் சற்றும் தாமதியாமல் ‘ஐயா! வேறு ஒன்றுமில்லை. இரண்டு வருடங்களுக்கு அவனுக்குச் சம்பளமும் இல்லை. நூல்களும் பிறவும் கூட அரசாங்கமே தந்து விடுவதாகச் சொல்லுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக என் மகன் இரண்டு வருடம் பசியில்லாமல் அரசாங்க இலவச விடுதியில் நல்ல சாப்பாடு பெறுவானே! இதற்காகத்தான் கேட்கிறேன்’ என்றார் அவர் வேண்டுகோளைப் பற்றி சிரிப்பதா! சிந்திப்பதா! இவ்வாறுதான் நாட்டிலே கற்பவர் பலர் உள்ள