பக்கம்:கல்வி எனும் கண்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கல்வி எனும் கண்



அவற்றின் ஆசிரியர்களுக்கு நிறையச் சம்பளமும் சலுகைகளும் தந்து, மாநிலப் பள்ளி ஆசிரியர்களையும் தூண்டிவிடுகிறது. தமிழக அரசும் மெட்ரிகுலேஷன் என்ற அமைப்பில் முழுக்க ஆங்கிலப்பள்ளி அமைத்து, அதில் பயில்வாரைத் தனிச் சாதியாக வளர்த்து வருகிறது. எப்போதோ வாழ்ந்தி ஆங்கிலேயர் காலத்திய ஆங்கிலோ இந்தியருக்கென் அமைந்த பள்ளிகள், இன்றும் அவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் நின்றதோடு, பொதுக் கல்வியில் சார அவர்கள் வந்துவிட்டனர்; ஆனாலும், நடைபெறுகின்றன. அதன் பாடத்திட்டமும் குறைவு-தமிழன் தரம் மிகத் தாழ்வு, அப்படியே கீழ்த்திசைப் (Oriental) பள்ளிகள் உள்ளன. இவ்வாறு ஒரே நாட்டில் பலவகையான ஆரம்பப் பள்ளிகள் இயங்குமானால் எப்படி நாட்டு ஒற்றுமை உண்டாகும்? இவர்கள் அனைவரும் மேல் வகுப்பிற்கு வந்து ஒரே முறைக் கல்வியைக் கற்கத் தொடங்குவார்களானால் எப்படி ஒரே சீராக அவர்கள் பயிலமுடியும் இதுபற்றி முன்னமே வேறு கூறியுள்ளமையால் ஈண்டு அதிகம் எழுதத் தேவை இல்லை என இத்துடன் அமைகின்றேன்.

இன்றைய அரசாங்கத்தின் வழியே தமிழ், தமிழ்நாட்டில் விரைவில் கட்டாயமாக்கப்பெறும் என அறிய மகிழ்ச்சி பிறக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் திரு. அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ், தமிழ்நாட்டில் கட்டாயமாக இருந்ததை மேலே முன்னரே காட்டியுள்ளேன். இங்கே மற்றொன்றும் நினைவுக்கு வருகிறது. மாராத்திய நாட்டில் வாழும் தமிழர் தமிழைக் கட்டாயம் படிக்கு நிலையில்-ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியினைக் கட்டாயம் பயிலும் நிலையில் ஒரு திட்டம் இருந்தது. நான் தமிழின் சிறப்பு நிலைத் தேர்வாளனாகப் பதினைந்தாண்டுகள் அங்கே பணிபுரிந்தேன். (தற்போதும் அதே நிலை நீடிக்கிறது என எண்ணுகிறேன்) தமிழை மட்டுமன்றி ஒவ்வொரு மொழியினையும் மேல்மட்டம் (Higher level) கீழ்மட்டம் (Lower leevl) என இரண்டாகப்