பக்கம்:கல்வி எனும் கண்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

கல்வி எனும் கண்


இந்திய அளவில் I-V/41.16% VI-VIII/35.45%


கிராம அளவில் 39.89% 32.05% இவையாவும் இந்திய அரசாங்கம் தந்த கணக்குகளேயாகும்.

நம் நாட்டில் இந்த அவல நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன. நம் நாட்டில் இன்றும் பல ஊர்களில் பள்ளிக் கூடங்கள் இல்லை. இருக்கும் பள்ளிகளுக்கும் கட்டடம் இல்லை. நமக்கு ஒன்றும், இன்று மேடைமேலோ-சட்டமன்றத்திலோ பேசுவதுபோன்று, பெரிய வானளாவிய கட்டடங்கள் தேவை இல்லை. கடந்த அறுபது ஆண்டுகளுக்குமுன் (20-10-1931) அண்ணல் காந்தி அடிகளார். இலண்டன், சாதம் மாளிகையில் (Chatham House) இக்கருத்தினை நன்கு வெளியிட்டுக் காட்டியுள்ளார். இந்திய நாட்டுக் குழத்தைகள் அத்தகைய ஆடம்பரமான கல்வியை விரும்பார் என்றும் அந்தமுறை, கல்வியை வளர்ப்பதைக் காட்டிலும் குறைத்தேவிடும் என்றும் கூறி, எளிய முறையில் பழங்காலக் குருகுல வாசமே நம் நாட்டுக்கு ஏற்றதெனக் காட்டியுள்ளார். (பக். 133.-Towards an Emlightend and Humane Society) இந்திய அரசாங்கம் சென்ற ஆண்டு அமைத்த இராமமூர்த்தி குழுவினர் தொடக்கக் கல்வி மட்டுமின்றி எல்லா நிலையிலும் கல்வி எப்படி அமையவேண்டும்-வளர வேண்டும்-எந்த நிலையில் இன்று கல்வி நாட்டில் இருக்கிறது. இதைக் களைந்து நலம்காண வழிகள் யாவை என்பனவற்றை நன்கு ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதையாவது நாட்டு அரசு செயல்படுத்துமா என்பதை இனி தான் காணவேண்டும்.

மத்திய அரசும் மாநில அரசும மக்கள் மன்றத்திலும் சட்டசபையிலும் அரசாங்கம் கல்விக்காக ஆண்டுதோறும் ஆண்டுக்கு ஆண்டு பலகோடிகள் அதிகமாகச் செலவு செய்தும், கல்வி வளரவில்லையே எனக் கனன்று அறிக்கை வெளியிடுகின்றன. ஆயினும் செயல்பாட்டில் அந்த