பக்கம்:கல்வி எனும் கண்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

அளித்தலே அரசின் முதற் கடமை என்பதைத் தானே இது விளக்குகிறது. நாட்டிலே கல்வி நலம் பெறவில்லையானால், வேறு எதுவும் நல்லமுறையில் அமையாது என அன்றுதொட்டு இன்று வரை எல்லாரும் கூறிவருகின்றனர். அன்று அரசுக்கு அறமுரைத்த வள்ளுவர் தொடங்கி இன்று நம் நாட்டு-உரிமை நாட்டுப் பெருந்தலைவர் பண்டித நேரு உட்பட அனைவரும் இக்கருத்தை வலியுறுத்துகின்றனரே. 1961இல் இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் இந்திய ஒருமைப்பாட்டுக் குழு அமைக்க ஏற்பாடு செய்த மாநாட்டில் பண்டித நேரு அவர்கள், நாட்டு ஒருமைப்பாட்டிற்கு மட்டுமன்றி நாடு வாழ-நானிலம் வாழ-சமுதாயம் சீர்பெறக் கல்வியே முக்கியம் என்பதனை வலியுறுத்திக் காட்டியுள்ளார். அந்த மாநாட்டில் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் மாநில முதல் அமைச்சர்களும், பல்கலைக் கழகத் துணைவேந்தர்களும் கல்வி வல்லுநர்களும் அறிவியல் மேதைகளும், தொழில் முதல்வர்களும் கூடி இருந்தனரே. (1961-செப் 28 முதல் அக் 1 வரை) அந்த மாநாட்டில் கூடி இருந்த அத்தனை பேரும் இன்றுவரையில் கல்வியில் நலம்பெறு மாற்றங்கள் என்ன கண்டார்கள்? எண்ணிப்பார்க்க இந்நூல் சுடர் விளக்காயினும் நன்றாய் விளக்கிடும் தூண்டுகோலாக அமைகின்றது. பண்டிதர் நேரு அவர்கள் கூறியதில் ஒரு பகுதியை இங்கே தருகிறேன்.

“Education provides the most important means of bringing about National integration. Since the Problems of National Integration or of national unity essentially, involue the attitudés of groups or large sections of the community and since Education in its brodest sense has been recognised as a powerful instrument for influencing or modifying these attitudes, the conference regards the process of Education and its re-orientation where necessary, as of primary importance” (The Hindu. 17. 11.91)

இந்தக் கருத்தினை அவர் வழியே நாட்டை ஆளும் மத்திய அரசோ மாநில அரசுகளோ எண்ணிப் பார்த்து உடன் திருத்தியிருக்க வேண்டுமே. இன்று, அன்று இல்லாத வகையில் எத்தனையோ வேறுபாடுகள் முளைத்துத் தலை விரித்தாடுகின்றனவே. இப்போதும் இத்தகைய பல்லோர் கலந்த நலம் காணும் கூட்டங்களை இன்றைய பிரதமரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கல்வி_எனும்_கண்.pdf/9&oldid=960875" இலிருந்து மீள்விக்கப்பட்டது