பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

கோங்கம்
காக்ளோஸ்பெர்மம் காசிப்பியம்

(Cochlospermum gossypium, DC.)

சங்க இலக்கியத்தில் கோங்கு எனப் பேசப்படும் இம்மரம், மலைப்பாங்கில் வளரும். இதன் பொன்னிற அழகிய முகையை மகளிர் மார்பிற்கு உவமிக்காத புலவரிலர்.

சங்க இலக்கியப் பெயர் : கோங்கு, கோங்கம்
தாவரப் பெயர் : காக்ளோஸ்பெர்மம் காசிப்பியம்
(Cochlospermum gossypium, DC.)

கோங்கம் இலக்கியம்

கபிலர் இதனை "விரிபூங்கோங்கம்" என்பார் (குறிஞ். 73).

‘விரிபூங்கோங்கம்’ என்பது குறிஞ்சிப் பாட்டுச் சொற்றொடர் (குறிஞ். 73). சங்கப் புலவர்கள் இதனைக் ‘கோங்கு’ எனவுங் ‘கோங்கம்’ எனவும் கூறுவர். கலித்தொகை ஓரிடத்தில் இதனைக் ‘கணிகாரம்’ என்று குறுப்பிடுகின்றது.

“மாவீன்ற தளிர்மேல்
கணிகாரம் கொட்கும் கொல்”
-கலி. 143:4-5

சிலப்பதிகாரத்தில் இது ‘கன்னிகாரம்’ எனப்படுகின்றது. [1] நிகண்டுகள், ‘கன்னிகாரம்’ ‘பிணர்’ ‘குயா’ ‘பவனி’ என்ற பெயர்களைக் கோங்கிற்குச் சேர்க்கின்றன.

கோங்கம் ஒரு மரம் என்றும். இதன் அடிமரம் பிணர் உடையது என்றும், இதன் இளமலர் பொன்னிறமானதென்றும் ஐங்குறுநூறு கூறும்.

“பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ

-ஐங் (367-1)

கோங்கமரம் மலையிடத்து வளரும். கோங்கின் முகை, அடி பரந்து கொம்மை கொண்டது. இது வனப்புள்ள முற்றா இள


  1. “கடிமலர் அவிழ்ந்த கன்னிகாரத்து” -சிலப். 11:110.