பக்கம்:சித்தி வேழம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தி வேமும் S 'இதென்ன, வேடிக்கையாக இருக்கிறதே! அழுகற் பழம் ஐயருக்கு என்பது போல, நமக்கு வேண்டாதது ஒன்றை விநாயகருக்குக் கொடுப்பதாவது! அதனால் அவருக் குக் கோபம் பிறக்காதா? கவளம் இடும்போது கல்லேயிட் டால் யானே நெடுநாள் வைத்திருந்து இட்டவனைச் சாடும் என்று கேட்டிருக்கிருேமே! நமக்கு வேண்டாத, அழுக்கான பண்டத்தைச் சித்தி வேழம் ஏற்றுக்கொள்ளுமா? - இவ்வாறு பல கேள்விகள் எழுவதற்கு இடம் உண்டு. ஆல்ை உண்மையாக, நமக்குத் தீங்கு பயக்கின்ற கள்ளமாகிய வினேகளுக்குக் காரணமாகிய பசுபோதத்தை (சிற்றறிவை)க் கவளமாக்கி விட்டால் இந்த யானே மகிழ்ச்சியோடு உண்ணும். ‘இவனுக்கென்று வேறு ஒன்றும் சொந்தமாக இல்லே. பல காலமாக இவன் வைத்திருப்பது இந்த அழுக்கு மூட்டைதான். இதை விடாமல் பற்றிக் கொண்டிருந்தான். இப்போது அந்தப் பற்றை நீக்கிக் கொடுத்துவிட்டானே!’ என்று எண்ணிக் களிப்புடன் உண்ணுமாம். - நல்ல உணவை மிகுதியாக உண்டு வளரும் களிற்றுக் குக் கொழுப்பு அதிகமானல் மதம் உண்டாகும். அந்த மதம் பிறருக்குத் தீங்கை உண்டாக்கும். இந்தத் தெய்வ யானே யும் நாம் அளிக்கும் பசுபோதக் கவளத்தை உண்டு களிப்பை அடையும்; அதனால் அதற்கும் மதம் வெள்ளம் போல உண் டாகும். அது கருணை யென்னும் மதம். கருணையில்ை நமக்கு நன்மையே பன்றித் திங்கு இல்லை. - ......தறுகட் பாசக் கள்ளவினைப் பசுபோதக் கவளமிட்க் களித்துண்டு கருணே என்னும் வெள்ளதம் பொழிசித்தி வேழம், - (தறுகட்பாசக் கள்ள வினைப் பசுபோதம் - கொடுமையை யுடைய பாசமாகிய கள்ளத் தன்மையையுடைய வினேக்குக் காரண மாகிய ஜீவபோதம்; சிற்றறிவு அல்லது அறியாமை.) -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/12&oldid=825719" இலிருந்து மீள்விக்கப்பட்டது