பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 ஒளி தங்து உள்ளிருளைப் போக்குகின்றது. இங்குச் சூரிய அனயும் தமிழையும் விளக்காக ஒப்பிட்டுக் கூறியிருப்பினும் விளக்குகளுள் பெரிய சூரியனை விட, தமிழ் விளக்கே சிறப்புடையதாகும். மேலும், இக் கல்வி விளக்கே சிறந்த விளக்காகும் என்னும் கருத்தை காலடியார்ச் செய்யுள் ஒன்றும் அறுதியிட்டு உறுதிப்படுத்திப் போந்துளது. மம்மர் அறுக்கும் மருந்து "கல்வியானது, இவ்வுலக இன்பம் அனேத்தையும் சயும். கொடுக்கக் கொடுக்கக் குறையாது. கற்றவர் தம்மை விளக்கமுறச் செய்யும். கற்றவர்கள் உயிர்வாழும் பொழுதே, ஏனைய பொருள்கள்போல் இடையில் அழிந்து விடக் கூடியதும் அன்று. ஆகவே, அறியாமையாகிய அகவிருக்ளப் (மயக்கம்) போக்கக்கூடிய அறிவுச் சுடர் (மருந்து) கல்விபோல் வேருென்றிருப்பதாக, யாம் எவ், வுலகிலும் என்றும் கண்டதேயில்லே' என்னும் கருத்தை, "இம்மை பய்க்கும்ால் ஈயக் குறைவின்ருல் தம்மை வினக்குமால் தாமுளராக் கேடின்ருல் எம்மை உகைத்தும் யாம்கானேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து' என்னும் காலடியார்ச் செய்யுள் நமக்குத் தருகின்றது. இங்கு. மம்மர் என்றது மயக்க இருள் அதாவது அறியாமை (அஞ்ஞானம்) யாகும். மருந்து என்றது அறிவுச் சுடரை (மெய்ஞ்ஞான பேம்) ஆகும். மேலும், இச்செய்யுளில் கல்வியைப் பற்றி, "தம்மை (கற்றவரை) விளக்கும்: என்று குறிப்பிட்டிருப்பது இவ்விடத்திற்கு மிகவும் ஏற்புடையதாகும். விளக்குவதுதானே விளக் காகும், மற்றும், சேக்கிழார் தம் பெரிய புராணத்தில், 99. "புன்ை கொளுவ மனம் முகிழ்த்த அருள்நீக்கி மலர்விக்கும் கலபயில’ (1290) என்று பாடியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. எனவே, மக்கட்கு இருக்க வேண்டிய இன்றியமைவது விளக்குக் கல்வியே எனத் தமிழ் முன்ஞேர்க்ள் கண்ஆ. யுள்ள கல்விக் கொள்கையை இனியும் மறுக்க முயயுழ்ே t: XEA,