பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் குழந்தை இங்குக் கல்வியை ஒரு குழங்தையாகவும் அதனேக் கற்கும் மாணவனைத் தாயாகவும் ஒப்பிட்டுக் கூறிஞல் அது சாலவும் பொருந்தும். அவ்வாறே. நல்லாற்றுார் சிவப்பிரகாச அடிகளார், தாமியற்றிய பிரபுலிங்கலீலை என்னும் நூலுள் ஒரிடத்தில், மிகவும் தெளிவாக எடுத்து இயம்பிப் போங் துள்ளார். வனவசை மாநகரத்தில், மமகாரன் என்னும் அரசனும் மோகினி என்னும் அரசியும் அரசாண்டிருங் தார்கள். அவர்கட்கு நீண்ட நாளாகப் பிள்ளேயே பிறக்க வில்லை. கடிய நோன்பு கிடந்தார்கள். அதன் பயனுய்க் குழங்தை ஒன்றும் பிறந்தது. குமுக்கை யென்ருல், அரண்மனைக் குழந்தை அல்லவா ? அதிலும் நீண்ட காளாக இல்லாமல் பின்பு பிறந்த குழந்தை அல்லவா ? ஆதலின். அக்குமுந்தைக்குச் செய்யப்படும் வளர்ப்பு முறை ககளப் பற்றிச் சொல்லவாவேண்டும் மிகவும் கன்னும் கருத்துமாக வளர்த்தாள் காயாகிய அரசி. அவள் வளர்த்த கற்கு இங்கு உவமையொன்று கொடுக்கப்பட்டுள்ளது. உலகில் கல்வி கற்க விரும்பிய முதல் மாணவன் ஒருவன் எங்கனம் தன் பாடங்களைப் போற்றி உணர்ந்து கற்பானே. அங்ங்னமே அரசியும் கன் குழந்தையை அருமை பெருமையுடன் வளர்த்தாள் எனும் கருத்தில், "படியில் கல்வி விரும்பினுேன் பாடிம் போற்றும் அதுபோல' என அவ்வுவமை அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, தாய் ஒருத்தி கண்விழித்தல், மருந்துண்ணல் முதலிய துன்பங் கனப் பொறுத்துக் கொண்டு தன் குழங்தையினே வளர்த்துக் 139 காப்பது போலவே, மாணவர்களும் பலவிதத்திலும் முயன்று கல்வியாம் குழந்தையை வளர்ச்சிபெறச் செய்ய வேண்டும். அதுதான் உணர்ந்து கற்றதாகக் கருதப்பட்டுச் சுவை மிகுதியும் பயக்கும். அங்கனம் எவ்வெவ்விதத்தில் கல்விக் குழங்தையை மாணவத் தாய்மார்கள் வளர்க்க வேண்டும் என்பதைச் சற்று ஆராய்வோம். புலமை பெறுவது எப்படி ? கற்கத் தொடங்கிய மாணவன் ஒருவன், முற்கூறி யுள்ள முறைப்படியே ஆசிரியரிடம் பாடங் கேட்டுக் கொள்ள வேண்டும். அதனேடு விட்டுவிடக் கூடாது, திரும்பவும் வீட்டில் வங்து படிக்க வேண்டும். கேட்ட நாற்களின் கருத்தை உலக வழக்கத்தோடு ஒத்திட்டு உண்மை உணர வேண்டும். போற்ற (சிங்கிக்க) வேண்டிய வைகளைப் போற்றி வைத்துக் கொள்ள வேண்டும். மனப் பாடம் செய்து கொள்ள வேண்டும். அவற்றுள் விளங் காமல் இருப்பதையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் ஆசிரியரை அடைந்து அவற்றைக் கேட்டுத் தெளிந்து கொள்ள வேண்டும். மாணவன் ஒரு நூலே ஒரு முறை பாடங் கேட்டதோடு விடக்கூடாது. எங்கனமாயினும் முயன்று மற்ருெருமுறை கேட்பது நலம். அங்ங்னம் இருமுறை கேட்டால், அங் நூலில் பெரிதும் பிழை படாமல் புலமை உள்ளவன் ஆவான். மு ன்ருவது முறை யும் பாடங் கேட்பானே யாயின், தானே பிறர்க்குப் பாடஞ் சொல்லக்கூடிய முறைமையினேயும் உணர்ந்து கொள்வான் என்பது உறுதி. எனவே, பன்முறை கேட்கப் புலமையும் பெருகிக் கொண்டே போகும் என்று தெளியலாம். கால் பங்குப் புலமை ஆனல், ஆசிரியர் சொல்லும் பாடங்களே எத்துணை முறை ஊக்கத்தோடு கேட்பினும், அந்நூற்களில் கால்