பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

107



எந்த எந்த எழுத்துகள் இணைந்து வரும் என்ற மயக்க விதி அறிந்து எழுத வேண்டும். பயிற்ச்சி, சால்ப்பு என எழுதலாகாது. ற் என்பதன் பக்கத்திலும் 'ல்' என்பதன் பக்கத்திலும் மற்றொரு மெய்யெழுத்து மயங்கி வராது. இது போல் பல உள.

க், ச் முதலிய எழுத்துகள் தமிழில் ஒரு சொல்லுக்கு முதலிலும் வரமாட்டா-இறுதியிலும் வரமாட்டா. மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வராத எழுத்துக்களை அறிந்து அதற்கேற்ப எழுத வேண்டும். இந்த விவரங்களை இலக்கண நூல்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் இலக்கண நூல்களில் வடமொழியாக்கமும் சொல்லப்பட்டுள்ளது. கம்பர் இராமாயண நூல்முழுவதிலும் வடமொழிப் பெயர்களையெல்லாம் தமிழ் உ ரு வ ம் கொடுத்தே எழுதி உள்ளார். விபீஷணன் வீடணன் ஆக்கப் பட்டான். இப்படிப் பல. நாமும் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும். .

யாப்பிலக்கண நூல்கள் செய்யுள் இயற்றும் விதிமுறை கள்ைக் கூறியுள்ளன. அம்முறையில் செய்யுள் இயற்றலாம். புதுக்கவிதை எழுதுவோர் எழுதுவாராக.

அணியிலக்கண நூல்கள், செய்யுளில் உவமை, உருவகம் முதலிய அணிகள் வந்து, கருத்தைப் புரிந்துகொள்ளச் செய்வதோடு நயம் தந்து சுவைக்கவும் செய்கின்றன. உரை நடையிலும் இந்த அணிகளைப் பயன்படுத்தலாம்.

இதுகாறும் இயல் தமிழ் வளர்ச்சி பற்றிப் பேசப் பட்டது. இயல் தமிழை அடுத்து இசைத் தமிழும் சுத்துத் தமிழும் உள்ளன. தமிழ் முத்தமிழ் எனப்படும் அல்லவா?

பண்டு இசைத் தமிழ் இலக்கண நூல்களும் கூத்துத் தமிழ் இலக்கண நூல்களும் தமிழில் இருந்தன. பெரும்