பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

131



அணிந்துள்ள மண்டை ஒட்டின் துளைக்குள் பதமாக உடல் சுருண்டு புகுந்து கொண்டதாம். பின், மயில் போய் விட்டதா என்பதை அறிந்துகொள்ள மெல்லத் தலையை வெளியே நீட்டிப் பார்க்குமாம், மயில் போகாததைக் கண்டதும் மீண்டும் தலையை உள்ளே இழுத்துக் கொள்ளுமாம் பாடல்:

“பாகம் ஒரு பெண் குடியிருக்கும்
பரமன் அணியில் பரித்த மணி
நாகம் நுழைவுற்று உடல் சுருண்டு கிடந்து
நகுவெண் தலைப் புழையில்
போக மெல்லத் தலைநீட்டிப்
பார்த்து வாங்கப் போகும் ஒரு
தோகை மயில் வாகனப் பெருமாள்
துணைத்தாள் கமலம் தொழுதிடுவாம்” (1.4)

என்பது பாடல். நகு வெண்தலை = வெண்ணிற மாயிருக்கும் தலை ஒடாகிய மண்டை ஒடு. வெள்ளொளி வீசுவதால் நகுவெண்தலை எனப்பட்டது. இது ஒரு நகைச் சுவைக் கற்பனை.

இங்கே ஒரு சிக்கலுக்கு இடம் உண்டு. நாகப்பாம்புக்கும் கருடனுக்கும் பகை என்பதும் அனைவரும் அறிந்த செய்தி. ஆனால், கருட ஊர்தியில் அமர்ந்து திருமால் சிவனைக் காணச் செல்லின், சிவன்மேல் உள்ள பாம்பு திருமாலின் கருடனுக்கு அஞ்சுவ தில்லையாம். அந்தப் பாம்பு கருடனை நோக்கி, ‘ஏன் கருடா நலமா?’ என நலம் விசாரிக்குமாம் சிவன்மேல் உள்ள துணிவால் நாகம் இவ்வாறு கேட்குமாம். திருமாலின் கருடன் சிவனுக்காக அஞ்சி, நலம் வினவிய பாம்பை நோக்கி, ‘எல்லாம் இருக்கிற இடத்தில் இருந்தால் நலம்தான்’ என்று பதில் இறுக்குமாம்.