பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

மனத்தின் தோற்றம்



தென்னிந்திய மொழிகளிலுள்ள சொற்களைத் தொகுத்துச் சில ஆய்வுரைகளை வெளியிட்டு, வட இந்திய மொழிகளும் தென்னிந்திய மொழிகளும் வெவ்வேறு குடும்பத்தவை என்னும் உண்மைக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வித்திட்டார். பம்பாயில் பன்னாள் வாழ்ந்த ‘பெறி’ என்னும் பேரறிஞர், இந்திய மொழிகளை நன்காராய்ந்து, வட இந்திய மொழிகள் ஆரியக் குடும்பத்தை யும் தென்னிந்திய மொழிகள் தமிழ்க் குடும்பத்தையும் சேர்ந்தவை என்னும் கொள்கையை வெளியிட்டார். இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஐரோப்பிய அறிஞர் சிலரின் உள்ளத்தை ஈர்த்தன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கால்டுவெல் (Caldwell) என்னும் பெரியார் தமிழ் நாட்டில் வந்து தங்கினார்; தென்னிந்திய மொழிகளைக் கற்றார்; அம்மொழிகளினிடையே உள்ள இலக்கண ஒப்புமைகளை ஆராய்ந்து பதினைந்து ஆண்டுகாலம் ஓயாது உழைத்து 'திராவிட (தென்னிந்திய) மொழிகளின் ‘ஒப்பிலக்கணம்’ (Comparative grammar of Dravidian Languages) என்னும் அரிய நூலை ஆக்கி 1856ஆம் ஆண்டில் வெளியிட்டு ‘ஒப்பிலக்கணம்’ என்னும் புதுத்துறையைத் தொடங்கி வைத்தார். இப்புது முயற்சியை மொழி நூலறிஞர்கள் மிகவும் வியந்து பாராட்டினர். ஒப்பிலக்கணத் துறையின் தந்தையாக விளங்கிய கால்டுவெல் அவர்களின் புதுத்துறைப் படைப்பைப் பாராட்டி, இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக் கழகம் ‘டாக்டர்’ என்னும் சிறப்புப் பட்டம் அளித்துச் சிறப்புப் பெற்றது.

கால்டுவெல் அவர்களின் படைப்பைக் கண்டு ஊக்கங் கொண்ட ஐரோப்பிய மொழி நூலறிஞர் சிலர், தாமும் அவர் பாதையைப் பின்பற்றி ஒப்பிலக்கண நூல்கள் படைக்க லாயினர், அறிஞர் ‘ழீல் பிளோக்’ (Jules Bloch) என்பவர்