பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

197



“தமிழ்ச் சொற்கள் முதல்முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலி &535] ōïT அடிப்படையாகக் கொண்டவை; தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துகள், மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப் படையாகும். எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலக மொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவங்கொண்டன என்பது புலப்படும்”.

இவ்வாறு ஞானப்பிரகாச அடிகளார், திராவிடக் குடும்பத்தின் தலைமை மொழியாகிய தமிழோடு உலக மொழிகளை முடிச்சுப் போட்டுள்ளார். பேராசிரியர்கள் பர்ரோ, ஏமெனோ ஆகிய இருவரும் இணைந்து ‘A Dravidian Etymological Dictionary’ என்னும் அகராதி யொன்றை 1961ஆம் ஆண்டில் வெளிளிட்டுள்ளனர். இந்த அகராதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய பத்தொன்பது திராவிடக் குடும்ப மொழிகளிலுள்ள ஒத்த உருவமுடைய சொற்கள் சிலவற்றை ரோமன் (ஆங்கில) எழுத்தால் எழுதி, அவற்றிற்கு ஆங்கிலத்தில் பொருள் கூறியுள்ளனர். இந்நூலில் திராவிட மொழிகளுக்குள் தமிழே முதன்மை பெற்றுள்ளது. முதலில் ஒரு தமிழ்ச் சொல் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளது; அதனையடுத்து அதே பத்தியில் அந்தத் தமிழ்ச் சொல்லோடு ஏறக்குறைய ஒத்த தோற்றமுடைய வேறு சில திராவிட மொழிகளின் சொற்கள் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப் பட்டுள்ளன. சில சொற்கட்குப் பொருள் கூறுமிடத்து, திராவிட மொழிகளிலுள்ள ஒத்த உருவமுடைய சொற் களேயன்றி, திராவிட மொழிகளிலிருந்து இந்தோ-ஆரியன் மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் சென்று கலந்துள்ள சில சொற்களும் உடன் கொடுக்கப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளன. இந்த அகராதியில், பத்தொன்பது