பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

205



பண்டமாற்று முறையே அன்று இருந்தது. அப்போது, மிகுதி யான மாடுகள் உடையவர்களே பெருஞ் செல்வராக மதிக்கப் பெற்றனர். மாட்டைக் கொடுத்து வேறு பெரிய பொருளை - அளவில் பெரிய பொருளை வாங்குவது மர பாகும். இவ்வளவு செய்திகளையும் ஈண்டு எண்ணிப் பார்க்க இந்தத் தனம் என்னும் சொல் வாய்ப்பு அளிக்கிறது. கன்னட மொழியில் சொல்லின் இறுதியில் ஒற்றெழுத்து வருவதில்லையாதலின் தனம் ‘தன’ என்றே வழங்கப்படு கிறது. இந்த வழக்காறு ஒரு வகைச் சுவையாகும்.

மலையாளம்

மலையாளம் தமிழ்ச்சேர நாடாதலின் மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இரண்டு மொழிகளிலும் ஒலிப்பு வேற்றுமையில்லாமல் ஒரே மாதிரியான சொற்கள் நிரம்ப உண்டு. தூய்மையான உருவங்களும் மலையாளத்தில் உண்டு. சில சொற்களில் ஞகரமும் வகரமும் வந்து இனிமை ஊட்டுகின்றன. தமிழ் நகரத்திற்குப் பதிலாகவும் தமிழ் சகரத்திற்குப் பதிலாகவும் ஞகரம் வருவது இனிமை தருகிறது. எடுத்துக்காட்டுகள்: நான் = ஞான்; நாங்கள் = ஞாங்கள்; நரம்பு = ஞரம்பு; நண்டு = ஞண்டு; நாவல் - ஞாவல். கஞ்சி = கஞ்ளு; மஞ்சள் - மஞ்சா - மஞ்ளு, மஞ்சு = மஞ்து, கழிந்த = கழிஞ்ளு எனத் தகரத்திற்குப் பதிலாகவும் ஞகரம் வருவது உண்டு. ககரத்திற்குப் பதில் வகரம் வருவதுண்டு; தேங்காய் - தேங்கா = தேங்ங் மாங்காய் - மாங்கா = மாங் வ; நரைத்த = நரச்ச; குறித்து = குறிச்சி, ஒருமித்து = ஒரு மிச்சு; சிரித்து = சிரிச்சி-எனத் தகரத்திற்குப் பதில் சகரம் வரும். இது பேச்சுத் தமிழிலும் உண்டு. ஐ. ஈற்றுக்குப் பதில் அ, எ வருவதும், சொல் ஈற்றில் உகரச் சாரியை வருவதும் மலையாளத்திலும் உண்டு.