பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

மனத்தின் தோற்றம்



பிற்பகுதியைச் சேர்ந்தவனாகிய விசயாலயச் சோழன் (கி.பி. 850.870) பல்லவர்க்குக் கப்பம் கட்டி ஒரு சிற்றரசனாய் உறையூர்ப் பகுதியில் ஒடுங்கிக் கிடந்தான். அப்போது தஞ்சைப் பகுதியை முத்தரையர் மரபினர் ஆண்டு வந்த னர். நாளடைவில், விசயாலயச் சோழன் முத்தரையரை வென்று தஞ்சைப் பகுதியைக் கைப்பற்றினான்.

விசயாலயனுக்குப் பிறகு அவன் மகனாகிய முதலாம் ஆதித்தச் சோழன் (கி.பி. 871-907) படிப்படியாகப் பல்லவரை வென்று, சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் தன்னுடையனவாக்கிக் கொண்டான். இவனுக்குப் பல ஆண்டுகட்குப் பின்னால், முதலாம் இராசராசன் (985-1014) காலத்தில்தான் சோழ அரசு மிகப் பெரிய வல்லரசாகத் திகழத் தொடங்கியது. இது, மூன்றாம் இராசேந்திரச் சோழன் (1247-1279) காலம் வரையும் நிலைத்திருந்து, பின்னர் வீழ்ச்சியுற்றுப் பாண்டியரால் பற்றப்பட்டது. இந்தச் செய்திகளின் அடிப்படையில் ஒரு முடிவு காண்பாம்:

இறுதிப் பல்லவனாகிய அபராசிதன் 897ஆம் ஆண்டு வரை பல்லவ நாட்டையும் சோழ நாட்டையும் ஆண்டிருக் கிறான். அபராசித பல்லவனைக் கொன்ற முதலாம் ஆதித்தச் சோழன் 907ஆம் ஆண்டுவரை ஆண்டிருக்கிறான். எனவே, சோழப் பேரரசு பிற்காலத்தில் மீண்டும் உருவாகத் தொடங்கிய காலம் கி.பி. 897ஆம் ஆண்டுக்கும் 907ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்துக்குள்ளே யாகும். இந்தக் காலக் கணிப்பு சிறிது முன் பின்னாகவும் இருக்கலாம். இந்த அடிப்படையில் நோக்குங்கால், சோழ அரசோடு பெரிய தொடர்பு கொண்டிருந்த கம்பர் சோழ அரசு ஒடுங்கிக் கிடந்த ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகத் தோன்றவில்லை. ஆனால், சோழ அரசு சிற்றரசா யிருந்தாலும் அரசு அரசுதானே?-ஏன் அக்காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாது?-என்று சிலர் வினவலாம். மற்ற