பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

21



யடித்துச் செருப்புத் தானம் செய்வீர்களாயின், தாய் தண்ணீரின்றித் தவிக்கக் கும்பகோணத்தில் கோதானம் கொடுப்பீர்களானால், இன்னும் இவற்றைப் போல் உள்ளுக்குள் தகாதன செய்துகொண்டு - வெளியில் சில நல்ல காரியங்களைச் செய்வீர்களானால் அவற்றால் ஒரு சிறிதும் பயனில்லை. அவையெல்லாம் துணையாகா. எல்லா வற்றிற்கும் அடிப்படையான நல்லொழுக்கமே நற்றுணையாவது” என்று சுட்டாமல் சுட்டியுள்ளார் -

“பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ.தே துணை.”

என்ற குறளால்!

அடுத்து, சாதிமுறை பற்றி ஆசிரியர் கூறும் கருத்து ஈண்டுக் கருதற்பாற்று

“ஒழுக்க முடைமை குடிமை விழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.”

என்னுங் குறளில் சாதி என்பது என்ன என்பதை வள்ளுவர் தெள்ளத்தெளியத் தெரிவிக்கிறார். ஒழுக்கமுடைமையால் பார்ப்பார் முதலிய வகுப்பினர் உயர் குலத்தாராகப் பகுக்கப்பட்டார்கள் என்றும், ஒழுக்கமின்மையால் பறையர் முதலிய வகுப்பினர் தாழ்குலத்தாராகப் பகுக்கப்பட்டார்கள் என்றும் சில ஆராய்ச்சியறிவிலிகள் உளறுகின்றனர். மேலும் சிலர், உயர் குலப் பார்ப்பான் ஒழுக்கம் தவறி விட்டால் தாழ் குலத்தானாவான் என்றும், தாழ்.குலப் பறையன் ஒழுக்கம் உயர்ந்து விட்டால் உயர்குலத்தானா வான் என்றும் குளறுகின்றனர். இக் கருத்துகள் எல்லாம் தவறுடையவை.

பார்ப்பான்-பறையன் என்னும் சாதிப் பிரிவினை, அன்று ஒழுக்கமுடைமையையும் இன்மையையும் கருதிப் பிரிக்கப்பட்டதன்று, அவரவர்கள் செய்யும் தொழிலைக்