பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மனத்தின் தோற்றம்



களல்லவா? அதுபோலவே, நன்மையை அடைய விரும்பு பவர்கள் முதலில் நல்லொழுக்கம் உடையவர்களாகத் திகழ வேண்டும். தீயொழுக்கம் என்பதோ, துன்பம் என்னும் நச்சு மாமரத்தை-முள்ளிச் செடியை வளர்க்க இட்ட விதையே யாகும்-என்பதும் கருதத்தக்கது. எனவே, நன்றிக்கு நல்லொழுக்கம் வித்தானாற்போல, இடும்பைக்குத் தீயொழுக்கம் வித்தென்றும், தீயொழுக்கம் இடும்பை தருவதைப் போல, நல்லொழுக்கம் நன்றி தரும் என்றும் கொள்ளல்வேண்டும்.

சிலர் நல்லொழுக்கமுடையவராய் உள்ளனர்; ஆனால் அவர்கள் வாழ்க்கையில் நன்மையின்றித் துன்புறுகின்றனர். சிலர் தீயொழுக்கமுடையவராயுள்ளனர்; ஆனால் அவர்கள் வாழ்க்கையில் தீமையின்றி இன்புறுகின்றனர் - இம் மாறுபட்ட காட்சிகளை நாம் காண்கின்றோமல்லவா? விதை விதைத்தவன் உடனேயே நன்மையடைவதில்லை; நன்மை யடையாததோடு மேலும் மேலும் பணச் செலவும், உடல் முயற்சியும் செய்து உழல்கிறான். இப்போது அலுப்பாக இருந்தாலும் பயிர் முற்றி விளைந்தபின் இன்புறுவா -னல்லவா? அதுபோலவே, நல்லொழுக்கமுடையவரும் முதலில் துன்புறுவதாகத் தெரியினும் பின்னொரு சமயம் நன்மை எய்துவார்கள். பின்னொரு சமயம் என்றால் அடுத்த பிறவியிலன்று. இப்பிறவியிலேயே, ஒரு சமயம், இவரது செயலால் உலகிற்குப் பயனுள்ளதாக மக்கள் அறிந்து கொண்டு இவர்க்குப் பல நன்மைகள் செய்வரன்றோ?

ஆதலின், பின்னால் உண்டாகும் நன்மைப் பயிருக்கு இப்போது கொள்ளும் ஒழுக்கம் வித்தாகும். இஃது இப்படி யெனவே, இப்போது நன்மைபோல் தெரிந்தாலும் பின்னால் வரப்போகும் துன்பப் பயிரின் விளைவுக்குத் தீயொழுக்கம் முன்கூட்டி இடும் வித்தாகும் என்பதும் புலப்படும். மற்றும்,