பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மனத்தின் தோற்றம்



பொருந்தப் புளுகிவிட்டிருக்கலாம். எனவே மாணிக்க வாசகருக்காகத்தான் கெடிலம் திசை மாறியது என்பதை நம்பாவிட்டாலும், அவர் காலத்தில் திசை மாறியிருக்கலாம் என்பதையாவது நம்பி வைக்கலாமே!

(2) அடுத்து, மாணிக்கவாசகரை முற்பட்டவராகவும், தொல்காப்பியத் தேவரைப் பிற்பட்டவராகவும் கொள்ளுத லும் பொருந்தாது. பத்தாம் நூற்றாண்டினராகிய மாணிக்க வாசகருக்குச் சில ஆண்டுகளாயினும் தொல்காப்பியத் தேவர் முற்பட்டவராகவே இருந்திருப்பார். ஏன், இரு வரையும் ஒரு காலத்தில் வாழ்ந்தவராகக் கூடக் கூறலாமே! தொல்காப்பியத் தேவர் வயதில் மூத்தவராயிருந்து முன்னால் காலமாகி யிருக்கலாம்; மாணிக்கவாசகர் வயதில் இளையவராயிருந்து பின்னால் காலமாகி யிருக்கலாம். திருப்பாதிரிப்புலியூர்க்குத் தெற்கே கெடிலம் ஓடியதாக எழுதிய தொல்காப்பியத் தேவர் காலமான சில ஆண்டுகளில் கெடிலம் திசை மாறியிருக்கலாமே! எனவே, தொல் காப்பியத் தேவர் நூற்றாண்டுக் கணக்கில் மாணிக்க வாசகர்க்கு முட்பட்டவர் என்று கூறமுடியாவிடினும், சில ஆண்டுகளாயினும் முற்பட்டவர் என்று கூறலாமே!

சிலர், வேறொரு காரணங் காட்டியும் தொல்காப்பியத் தேவரின் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயலலாம். அஃதாவது, கலம்பகம், தூது, உலா முதலிய 96 வகைச் சிற்றிலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்றியவை; எனவே, திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவர் மணிவாசகருக்குப் பிற்பட்டவரே என்று கூறக் கூடும்.

கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்கள் சங்க இலக்கியங் கட்குப் பிற்பட்டனவேயெனினும், ஏழாம் நூற்றாண்டி லிருந்தே இத்தகு சிற்றிலக்கியங்கள் தோன்றத் தொடங்கி