பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மனத்தின் தோற்றம்


(கிழக்குக்) கரையில் அமைந்திருக்கும் இவ்வூரை அயிந்திர புரம் என அக்காலத்தில் பெரியவர்கள் அழைத்திருக்கலாம் என்பது அடியேனது புதிய கற்பனை. ஆறு வடக்கு நோக்கி ஒடுவது அற்புதம் என்றால், ஆற்றின் கிழக்குக் கரையில் தெய்வத் திருப்பதி அமைந்திருப்பதும் அற்புதம் என்பது சொல்லாமலே விளங்குமே! இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வர் . ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற முறையில் முடிந்த முடியாக இங்கே அடியேன் கூறவில்லை - கூறவும் முடியாது; சிந்தனையைக் கிளறித் தூண்டும் முறையிலேயே ஆராய்ச்சியாளர் முன் இந்தக் கருத்தை அடியேன் வைத்துள்ளேன். சிறப்பு கருதித் திசையின் பெயரால் கெடிலம் உத்தர வாகினி' என அழைக்கப் படுவதைப் போல, ஊரும் சிறப்பு கருதித் திசையின் பெயரால் அயிந்திரபுரம் என அழைக்கப் படலா மல்லவா?

கோயிலின் கிழக்கு வாயிலின்மேல் கோபுரம் இல்லை. மேற்கு வாயிலின்மேல் கோபுரம் இருக்கிறது; ஆற்றுப் பக்கமாக இருக்கும் மேற்குக் கோபுரவாயில் தான் கோயிலின் சிறப்பு (முக்கிய) வாயிலாகக் கருதப்படுகிறது. இறையுருவங்கள் விழாக்காலங்களில் வெளியில் செல்வது . வருவது எல்லாம் இந்த மேற்குக்கோபுர வாயிலால் தான். மேற்குவாயிலே சிறப்பிடம் பெற்றிருப்பினும், கருவறையில் திருமால் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருப்பது கிழக்கு நோக்கியேயாம். கோயிலின் நடுவிலும் ஒரு சிறுகோபுரம் உள்ளது. கோயிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரே மலையிருக் சிறது; இம்மலையின் மேலும் கோயில் உண்டு;

இந்த மலைக் கோயிலும் கிழக்குநோக்கியே அமைந் துள்ளது. அயக்கிரீவன் கோயில் என்பது இதன் பெயர். அயக்கிரீவன் என்பது திருமாலின் பெயர்களுள் ஒன்று. திருமாலின் தோற்றங்களுள் அயக்கிரீவத் தோற்றமும் ஒன்று. அயம் (ஹயம்) என்றால் குதிரை; கிரீவம் என்றால்