பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

மனத்தின் தோற்றம்



என்ன சொல்லவேண்டுமா? என் நிலைமையை எல்லாம் அறிவித்து,

“வந்தால் இந்நேரம் வரச்சொல்லு வராதிருந்தால்
மாலையாகிலும் தரச்சொல்லு.”

என்று கூறி அனுப்பினாள் தலைவி. பின்பு குற்றாலநாதர் தன்னுடன் கூடுவாரோ? மாட்டாரோ? என்று குறியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் ‘குறி கேட்கலையோ குறி குறி’ - ‘குறி கேட்கலையோ குறி குறி’ என்று கூவிக்கொண்டு குறப்பெண் ஒருத்தி குறுகினாள் அங்கே, அவள் இடையில் ஒரு குலுக்கும், நடையில் ஒரு தளுக்கும் விழியில் ஒரு சிமிட்டும், மொழியில் ஒரு பகட்டுமாய்க் காணப்பட்டாள். கையில் குறிசொல்லும் கோல்; கழுத்தில் பச்சை மணிபவளமணி, கருங்கூந்தலில் செச்சை மலர்; நெற்றியில் நீலநிறப் பொட்டு, இடுப்பில் கூடை - இவைகளின் தொகுப்பே அக்குறப்பெண்.

குறி சொல்வதாகக் குறத்தி கூவியதைக்கேட்ட வசந்தவல்லி, குற்றாலநாதரே கிடைத்துவிட்டதாக எண்ணி ஒடோடியும் வந்து உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். சென்றதும் குறத்தியை நோக்கி, "ஏ குறவஞ்சியே! உன் சொந்த மலை எந்த மலை? அந்த மலையின் வளத்தை அறிவிக்கக் கூடாதா” என்று ஆவலுடன் கேட்டாள். உடனே தொடங்கிவிட்டாள். குறப்பெண். "ஒ அம்மே! எங்கள் மலையின் வளப்பத்தைச் சொல்லுகிறேன் கேள்! எங்கள் மலையில்,

“வாணரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”.

எங்கள் மலையிலே ஆண்குரங்குகள் பெண் குரங்கு களுக்குத் தாமாய்ப் பழங்கொடுத்துக் கொஞ்சும். பெண்