பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

91


குரங்குகள் சிந்துகின்ற பழங்களுக்கு ஆண் குரங்குகள் கையேந்திநிற்கும். ஊம் தெரிகிறதா?” என்றாள் குறவஞ்சி. இப்பாட்டில் ஆழம் மிகவும் உண்டு. என்ன அது?

இதைக்கேட்ட வசந்தவல்லி, ஆகா! விலங்காகிய பெண்குரங்கு செய்த நற்பேறுகூட நான் செய்யவில்லையே. பெண்துரங்கினிடம் ஆண்குரங்கு தானாகவே சென்று கொஞ்சுகிறதாமே கெஞ்சுகிறதாமே! நானாக விரும்பியும், குற்றாலநாதர் என்னை வந்து கூட மாட்டேன் என்கிறாரே! என்று ஏங்கும்படியாக, அவளைக் குத்திக்காட்டுவதுபோல இருக்கின்றதல்லவா இந்தப் பாட்டு?

மேலும் குறவஞ்சி கூறுகின்றாள்:

“கிழங்கு கிள்ளித் தேன் எடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்”

தெரியுதா அம்மே!

வல்லி: ஊம் தெரிகிறது தெரிகிறது. சரி உன் மலையின் வளப்பத்தைப் பாடுகின்றாயே, அம்மலையின் பெயரைச் சொல்லமாட்டேன் என்கிறாயே!

குறத்தி: ஓகோ மலையின் பெயரா? இதோ சொல்லு கிறேன் அம்மே!

“கூணல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே”

எங்கள் மலை குற்றாலநாதர் எழுந்தருளியுள்ள திரிகூட மலை அம்மே என்று கூறினாள்.

ஒகோ அப்படியா என்று பெருமூச்சு விடுகிறாள் வல்லி, அல்வாவின்மேல் ஆவல் கொண்டிருக்கும் சிறுவனிடம், அல்வாவைப் பற்றியும், அது இருக்கும் இடத்தைப் பற்றியும்