பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகனுடைய சாஸனங்கள்

30

காலங்களில் சம்ஸ்கிருத மொழியில் மூடனென்னும் பொருளில் வழங்குவதும் வியக்கத்தக்கதே.

அசோகனுடைய விசாலமான நோக்கங்களும் எண்ணங்களும் கைகூடவில்லை. ஆயினும், இது அரசனின் குற்றமென்று கூறுவது தவறு. முயற்சி மட்டுமே மனிதனுக்கு உரியது. எண்ணங்களின் வெற்றி அல்லது தோல்வி இயற்கையிலுள்ள வேறு பல நிமித்தங்களைப் பொறுத்திருக்கிறது. இவை ஏகோபித்தால் மனிதனின் நோக்கங்கள் கைகூடுகின்றன. அதினால் அசோகனுடைய எண்ணங்கள் கைகூடவில்லையென்பது அவன் புகழைக் குறைக்கவில்லை. தர்மத்தைப் போற்றுவதில் ஏற்பட்ட சிரத்தையிலும், மதவிஷயமான சண்டைகள் ஓய்ந்து மடிந்துபோகவேண்டுமென்ற நோக்கத்திலும், ஜனங்கள் ஒற்றுமையுடனும் சுபிக்ஷத்துடனும் சந்தோஷத்துடனும் வாழ்ந்துவரவேண்டுமென்ற கோரிக்கையிலும், ஜனங்களுடைய க்ஷேமம் அரசனுடைய நடத்தையைப் பொறுத்திருக்கிறதென்ற உண்மையின் உணர்ச்சியிலும் அசோகனுடைய சரிதை மானிடருக்குப் பெரிய மலையிலக்காயிருக்கிறது.

நாட்டின் க்ஷேமத்தைப் பலவாறு வளரச் செய்து அசோகன் 
அசோகனுக்குப்
பின் வந்த
மோரிய அரசர்

முப்பத்தேழு வருஷங்கள் ஆண்டபின் காலகதியை அடைந்தான், அரசனுடைய இறுதிக் காலம் கி. மு. 232 என்று கணக்கிடப்படுகிறது. அசோகனுக்குப் பல குமாரர் இருந்தனர். மகததேசத்தில் அசோகன் பேரனான தசரதன், அசோகனுக்குப் பின் அரசனானான், இவன் தன் மூதாதை செய்துள்ள குகைகளின் அருகில் ஆஜீவகர்களுக்கு மூன்று குகைகளைச் செய்திருக்கிறான். இது தான் இவனைப்பற்றி நமக்-