பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

நரை திரை மூப்புப் பிணி எல்லோர்க்கும் வரும்

நரை திரை மூப்புப் பிணி சாக்காடு நீக்கிய சித்தர்

நல்ல தனமாய் நயந்தழைத்தல் (அ 29-3-63; 32)

நல்லது பொல்லாது (- நன்மை தீமை) அறிந்தவர்

நல்லது பொல்லாது நடந்தால் நாலுபேர் கூடுவர்

நல்லதும் கெட்டதும் அறிந்து நட

நல்லதைக் கொண்டு அல்லதைத் தள்ளு

நல்லவராயும் வல்லவராயும் வாழ்தல் வேண்டும்

நல்லவன் பொல்லவன் எல்லவர்க்கும் பொது

நல்லவை கெட்டவை நன்கறிந்தவர்

நல்லறமும் நல்லொழுக்கமும் தலை நின்றவர்

நல்லறிவும் நல்லுணர்வும் நல்லொழுக்கமும் ஒருங்கே

கொண்டவர்

நல்லார் பொல்லார் எல்லார்க்கும் ஒத்த விதி

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் - பெண்பாற்

புலவர்

நல்லெழில் இன நலம் (அகம் 249)

நல்வினை நீக்கிய வல்வினையாளர் (ச. 77-10)

நலங்கி மலங்குதல் (நலங்குதல் - நொந்து போதல்;

மலங்குதல் - கலங்குதல்)

நலங்கி மெலிந்து போதல்

நலம் பொலம் அறிந்திருத்தல் - நன்மை தீமை அறிந்

திருத்தல்

நலம் பொலம் இரண்டும் அனைவர்க்கும் உண்டு

நலமும் செல்வமும் நலிவடையப் பெற்றவர்

நலமும் நன்மையுமே செய்யும்

நலமும் வளமும் பெற்ற நாடு

நலிந்து அழிந்துபோகும் நிலைமையில் உள்ள

நலிந்து நசித்துப்போன; நைந்து போன