உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

நாளுங் கிழமையும் நலிந்தோர்க் கில்லை (நறுந்

தொகை 47)

நாளுங் கோளும் நல்லோர்க்கு நல்ல

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக

(வளர்தல்)

நித்த முத்த சுத்த புத்த சத்த பெருங்காளி (பாரதி 2

38-3)

நித்திய நிரஞ்சன நிர்த்தொந்த நிஷ்களமாயிருக்கும்

கடவுள்

நித்தியமாயுள்ள சத்தியப் பொருள்

நித்தமொரு பட்டுடுத்தி நேரமொரு பூச்சூட்டி வளர்ந்

தாள் (கோவலன் கதை)

நிதானத்துக்கும் பொறுமைக்கும் பெயர் போனவர்

(கல்கி)

நிந்தனை பேசி நிஷ்டூரம் சொல்லல் (கல்கி)

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை உடைய

புதுப்பெண்

நியாயமா, நேர்மையா, தர்மமா, அடுக்குமா?

நியாயமாகவும் நேர்மையாகவும் செயலாற்றல்

நிரந்தரம் உலகில் நிற்கும் நெடும்பழி (கம்ப 1-9-20)

நிரந்து கலந்துபேசி முடிவு செய்தல்

நிரம்பி வழிதல்

(மேடுபள்ளம்) நிரவிச் சமன் பண்ணல்

நிரக்ஷரகுக்ஷி - எழுதப் படிக்கத் தெரியாதவன்

நிலந்தினக்கிடந்த நெடு நிதிச்செல்வம் (தணி ஆற் 25)

நிலபுலம் நிரம்பப் படைத்தவன்

நிலம் பொலங்கள்

நிலவளம் நீர்வளம் நிறைந்த நாடு

நிலவு சூடிய நின்மலன் (சூத 5-12-34)