பக்கம்:அன்பழைப்பு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பழைப்பு

15




தோளிலே மண்வெட்டி சுமந்து செல்லும் காலம் மாறி, நிலத்தை உழும்படி 'டிராக்டர்' ஏற்பட்டு விட்டது!

ஆனால், டிராக்டரின் பெயரையோ அல்லது அது தரும் நலனையோ, ஒரு விவசாயிடம் கேட்டுப்பாருங்கள்; மாாியம்மன் தெரிகிற அளவுக்கு இதுபற்றி, அவனுக்குத் தெரியாது.

காலையிலே, ஓமந்தூரார் அவர்கள் வயலுக்கு தேவையானது உரம் என்பது குறித்து விளக்கினார்கள். உரம் வேண்டும் - வயல் வளமாக! ஆனால் அந்த உரத்தின் பெருமை குறித்து உழவர்களுக்குக் தொியுமா? பூஜை நேரத்தில் ஐயர் மாட்டு மூத்திரத்தையும் சாணியையும் கலந்து 'பஞ்சகவ்யம் சாப்பிடு' என்ற கூறுவதை கேட்டிருக்கிறானே ஒழிய அந்த அளவு தான், மாட்டுச் சாணத்தின் பெருமை குறித்து அறிந்திருக்கிறானேயாெழிய, சாணத்தின் பெருமை அது உரமாகும் அருமை-அறிந்ததுண்டா? நமது விவசாயிகள்?

எருமைப் பாழ்படுத்த எத்தர்கள் பஞ்சாங்கத்தை பயன் படுத்தினர், என்பது அவனுக்குத் தெரியுமா?

இதைச் சொன்னால் 'கடவுள் இல்லாதவன்' - என்று. இலேசாகக் கூறிவிட முயல்கிறாா்கள். கடவுளை மறக்க வேண்டும் என்பது அல்ல, எமது நோக்கம். கடவுளை மறுக்கவும், அவரை மறைக்கவும் நாம் என்ன கடவுளிலும் மேம்பட்டவா்களா? அல்லது கடவுள் தான் என்ன, நமது பேச்சால் மறைந்துவிடப் போகிறவரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பழைப்பு.pdf/16&oldid=1501995" இலிருந்து மீள்விக்கப்பட்டது