பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அபிராமி அந்தாதி

இருந்தால் என்ன? அம்பிகைக்கு எல்லாரும் குழந்துை கள். சில சமயங்களில் அசுரர்கள் கொட்டத்தை அவள் அடக்கியிருக்கிறாள். பொல்லாத குழந்தையைத் தாய், அடித்து ஒறுப்பது இல்லையா? அவளுக்கு அவர்கள் பகை வர்கள் அல்ல. - -

தேவர்கள் அம்பிகையின் துணையினால்தான் அமர லோக வாழ்வில் நிலைபெற்றிருக்கிறார்கள். சண்டன், முண்டன், பண்டன் மகிஷாசுரன் என்று எத்தனை பேர்கள் தோன்றி இந்திரனுக்கு அவலத்தை உண்டாக் கினார்கள்! அவர்களை அழித்துத் தேவர்களைக் காப்பாற். றினவள் அன்னை. ஆதலின் அவளுடைய துணையை என்றும் நாடி அவளை விட்டு விலகாமல் வந்தித்து வாழ்த்தி வாழ்கிறார்கள் சுரர்கள். .

அசுரர்களில் எஞ்சியவர்கள். அவளுடைய வீரத்தை உணர்ந்து படிந்து வந்திருக்கிறார்கள். தானவர்களும் அம்பிகையை உணர்ந்து இங்கே வந்திருப்பது வியப்பாகத் தோன்றும். அவள் திருவருளாற்றல் மேட்டிலும் நீரை ஏற்றும், கல்லையும் நெகிழ்வித்துக் கனியாக்கும்.

இந்த அற்புதத்தை அன்னையின் சந்நிதானத்தில் காண்கிறோம். வானவர் வணங்கவும் தானவர் வந்திக்க வும்.அப்பெருமாட்டி சிங்காதனத்தில் அமர்ந்து திருவோ லக்கம் கொண்டிருக்கிறாள். ;

வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்.

அரண்மனை வாயில், கூடம், உள்மண்டபம் எங்கும் இவர்களுடைய கூட்டம். இந்த அரண்மனையின் உள்ளே புகுந்து பார்க்கலாம், அம்பிகை திருவோலக்கத்தில் பலரும் காண வீற்றிருக்கும் ஆஸ்தானத்தில்தான் ஒரே கூட்டம், உள்ளே அந்தப் பெருமாட்டி தங்கும் இடங்கள் பல