உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதவல்லி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

அமுதவல்லி


ளாக, கதவுப் படலை எற்றித் தள்ளிவிட்டு வெளியே பாய்ந்தாள்.

புயலா அவள்?

“இந்தாப் பாரு!...”

அவன் அலட்டினான்.

சாலை நெடுகிலும் செம்மறிக்கிடா கும்பல் சேர்த்து வந்துகொண்டிருந்தது.

அவன் மீண்டும் அலட்டினான்.

அவள் ஒடிக் கொண்டேயிருந்தாள்.

அந்தியும் ஓடிவிட்டது!

சோளக் கொல்லைக்குக் கீழ்வசத்தில் இருந்த ஏற்றக் கிணற்றை நெருங்கினாள் செம்பவளம்.

"ஐயையோ! ஏலே பொண்ணு! அது எரக்க மத்த பாழுங்கிணறு! நில்லு"? என்று கூவிக் கொண்டே அவன் தலைதெறிக்க ஓடினான்.

சுக்கான் கல் இடறி விழுந்து, எழுந்து மீளவும் ஓடினான்.

அதோ கிணறு!

எட்டுந்தொலைவில் செம்பவளம் ஓடினாள்.

இந்தனவே இனிதமட்டும் ஒங்களதுக்குவாங்கிடு! அது எங்கிணறு, அதிலே விளுந்துச்சாகிறத்துக்கு உனக்கு அதிகாரத் இல்லே! என்னாக்கா அது எனக்கு இச்செந்தமான கேணி அப்படியே நீ மீறி விழுந்தியின்னா, அதே நொடியில் நானும் ஒங் கூடவே விளுந்து உசிரை மாய்ச்சிக்கிடுவேன்! நானு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/204&oldid=1460007" இலிருந்து மீள்விக்கப்பட்டது