பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 - சுந்தர சண்முகனார்

 சொல் சிற்பமாகிய- சொல் ஒவியமாகிய காவியத்திலும் இலக்கியத்திலும் புலவர்கள் புனைந்துரைத்துள்ளனர். சிற்பியையும் ஒவியனையும் தூற்றாதவர்கள், சொல் ஒவியமாகிய இலக்கியங்களில் புனையப்பட்டுள்ளமையை மட்டும் இழிவாக நினைப்பதேன்? மற்றும், நமக்கெல்லாம் பால் தந்து வளர்த்த அன்னைமார்களின் மார்பகங்களைப் பற்றித் தீய எண்ணம்- தீய உணர்ச்சி கொள்வது அந்தக் காலத்தில் பெரும்பாலும் இல்லை என்பதும் ஈண்டு எண்ணத் தக்கது. இந்த அடிப்படையில் தான், இராமன், ஏந்து இள முலையாளே' என்று சீதையை விளித்ததாகக் கொள்ளவேண்டும்

சித்திர கூடப் படலம்

மேகமும் நாகமும்

மலைச்சாரல் பகுதியில், நிரம்ப நீரைக் கொண் டிருக்கிற- சூல் கொண்ட கரிய மேகமும் வரிசையாய் உறங்கிக் கொண்டிருக்கும் கரிய யானைகளும் வேற்றுமை அறிய முடியாதபடி இருக்கும் காட்சியைக் காண்பாய் என இராமன் சீதைக்குக் காண்பிக்கிறான்.

நீள மாலைய துயில்வன, நீர் உண்ட கமஞ் சூல் காள மேகமும் நாகமும் தெரிகில காணாய்

(2)

காள மேகம்= கரிய மேகம், நாகம்= மலை.

மழை உதிர்ப்பது

காதலோடு மந்தியும் (பெண் குரங்கும்) கடுவனும் (ஆண் குரங்கும்) விளையாடிக் கொண்டுள்ளன. மந்தி அருவி நீரைக் கடுவன்மேல் வீசுகிறதாம். கடுவன் மலை மீது ஏறி மேகத்தைப் பிழிந்து மந்திமேல் நீர் சொரியச் செய்கிறதாம்.