பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 சுந்தர சண்முகனார்

இன்னிசையைச் சுவைத்த மக்கள், பின்னர், செயற்கையாகத் துளைகள் இட்டு ஊதத் தொடங்கினர். வேய் என்றால் மூங்கில், மூங்கிலால் செய்த குழல் வேய்ங் குழல் எனப்பட்டது- என்பதாகப் பலரும் அறிந்த செய்தி இது. இந்தப் பாடலிலோ கொன்றை வேய்ங்குழல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள் யாது? இங்கே வேய் என்பது மூங்கிலைக் குறிக்கவில்லை. வேய் என்பதற்கு, உள் துளை உடைய பொருள்' என்னும் பொருளும் உண்டு. கொன்றை மரத்துக் காய் அல்லது பழம், உள் குழை உடையதாய் நீண்டிருக்கும். அதில் நடுநடுவே துளையிட்டுக் குழலாகப் பயன்படுத்தி இசைப் பதும் உண்டு. இதைத்தான், ஈண்டு கொன்றை வேய்ங் குழல்' என்பது குறிக்கின்றது.

சித்திர கூடப் படலம்

அருந்ததி

காட்டில் சென்று கொண்டிருந்த பொழுது, இராமன் சீதைக்குப் பலவேறு காட்சிகளைக் காண்பித்துக் கொண்டே செல்கிறான். சீதையை விளித்து விளித்துப் பல சொல்கிறான். அருந்ததிக்கு நன்னெறியாகிய கற்பு இன்னது என்று அறிவித்தவளே! என்று ஒரு நேரம் விளித்தான்:

சீலம் இன்ன தென்று அருந்ததிக்கு அருளிய திருவே! (16)

என்பது பாடல் பகுதி. கற்புடைய மகளிர் முல்லை வளர்ப்பதும் முல்லை மலர் சூடிக் கொள்வதும் மரபு. அதனால், கற்பு என்னும் சொல்லுக்கு முல்லை என்னும் பொருளும், முல்லை என்னும் சொல்லுக்குக் கற்பு என்னும் பொருளும் சொல்லும் அளவிற்கு இந்த அமைப்பு