பக்கம்:அறப்போர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் புகழ்


அறிவைச் செலுத்தி ஆட்சியை நடத்தும் இப் பெருமானுக்கு இவ்வளவு தமிழறிவு இருப்பது வியப்பிலும் வியப்பு!’ என்று அவர் வியப்பில் ஆழ்ந்தார்.

சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறை என்ற நீண்ட பெயரை உடையவன் அந்த அரசன். சேரர் குலத்தில் வந்தவன். முடியுடை மூவேந்தரில் ஒருவன். அவனுடைய கண்கள் சிறியனவாக இருந்தன. யானைக்குக் கண்கள் சிறியனவாகவே இருக்கின்றன. அதனால் அந்த யானையின் பெருமை குறைந்து விடுமா? அவன் கண்களின் சிறுமையையும் அவனுடைய பெருமையையும் ஒருங்கே எண்ணியவர்கள் அவனை யானைக்கட் சேய் என்று சொல்லலானார்கள். அந்த அரசன் இப்போது அரசவையில் வீற்றிருந்து புலவருடன் அளவளாவிக் கொண்டிருந்தான்.

புலவர் கூட்டம் கலைந்தது. குறுங்கோழியூர் கிழாருக்கு உண்டான வியப்பு அவர் உள்ளத்தே நிலை பெற்றது.

*

மற்ருெரு நாள் பாணரும் விறலியரும் சேர்ந்து தம்முடைய இசைத் திறமையையும் ஆடல் திறமையையும் அரசவையில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அவர்களுடைய

57
57
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/75&oldid=1460094" இலிருந்து மீள்விக்கப்பட்டது