பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
158

கலவையின் செழுமையை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான அல்லது மாறக்கூடிய சாதனம்

choke coil : (மின்.) தூண்டு சுருள் : மின்னோட்ட வேகத்தைத் தடுத்தாளும் திருகு கம்பிச்சுருள் அமைப்பு

choke damp : (வேதி.) சுரங்க நச்சு ஆவி : சுரங்கங்களில் உள்ள கார்பன்டையாக்சைடு என்னும் நச்சுத் தன்மையுடைய ஆவி

cholera : (நோயி) வாந்தி பேதி : வெப்ப நாடுகளில் உணவாலும், நீராலும் பரப்பப்படும் பாக்டீரியா மூலம் - உண்டாகும் நோய். வாந்திபேதி இதனால், தொடர்ச்சியாக வாந்தியும் பேதியும் ஏற்பட்டு, உடலில் நீர் வற்றிப் போய் மரணம் உண்டாகிறது

வாந்திபேதி

cholesterol : (உட.) கொழுப்பினி : உடலின் அனைத்து உயிரணுக்களிலும், குறிப்பாக நரம்பு உயிரணுக்களிலும், காணப்படும் ஒரு பொருள். பித்தப்பையில் விளையும் கல் போன்ற கடும் பொருள் மற்றப் பொருள்களுடன் கொலஸ்டிராலாகிய கொழுப்பினி அடங்கியுள்ளது. தொழுப்புப் பொருளைக் கொண்டு செல்வதற்கும், தோலிலும் முடியிலும் எண்ணெய்ப்பசை ஏற்படுவதற்கும் கொழுப்பினி உதவுகிறது. உடலைக் கட்டுப்படுத்தும் இயக்குநீர்கள் (ஹார்மோன்கள்) உண்டாவதற்கு இது பயன்படுகிறது

chopper : (மின்.) மின்னோட்டத் தறிப்பான் : ஒரு மின்சுற்று வழியைத் தானாகவே முறிப்பதற்கான ஒரு சாதனம். ஒரு தேர் மின்னோட்டச் சுற்றுவழியில் இது நேர் மின்னோட்டத்தை ஒரு துடி நேர் மின்னோட்டமாக மாற்றுகிறது

chord : (வாணூ.) நாண்வரை : விழானத்தின் கற்றழுத்தத் தளத்தின் ஆயத் தொலைவுகளையும் கோணங்களையும் கணக்கிடுவதற்குரிய விருப்பப்படியான ஒரு தொடக்கக் கோடு கணிதத்தில் வில் வளைவின் வரை

எந்திரத்தில் உச்சியிலோ அடியிலோ உள்ள ஆதாரக் கட்டின் முதன்மையான பகுதி

chordal pitch : நாண்வரை வெளி : ஒரு பல்லிணையின் ஒரு பல்லிலுள்ள் நேரிணையான புள்ளியின் தூரம். இது இடைவெளி வட்டத்தின் ஒரு நாணாக அளவிடப்படுகிறது

chord length : (வாணூ.) நாண்வரை நீளம் : விமானத்தின் காற்றழுத்தத் தளத்தின் புறம் நீட்டிய நீளம்

chroma : வண்ணச் சாயல் : இது ஒரு வண்ணத்தின் ஒளிர்வு, வலிமை, அல்லது தன்மையைக் குறிக்கிறது. வண்ண்த்தை மட்டுப்படுத்துதல் அல்லது மங்கலாக்குதல் மூலம் வண்ணச் சாயலைக் குறைக்கலாம்

chromaluminium : (உலோ.) குரோமா அலுமினியம் : மிகவும் வலுவான அலுமினிய உலோகக் கலவை

chromate : (வேதி.) குரோமேட் : குரோமிக் அமிலத்தின் உப்பு

chromaticity : (மின்.) வண்ண முனைப்புத் திறன் : ஒளியின் நிற முனைப்புத் திறன்

chrome nickel steel : (உலோ.) குரோம் நிக்கல் ஏஃகு : இது விலை மதிப்புடைய ஓர் எஃகுக் கவசம். இது எந்திரங்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதற்கான கவச