பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

638

trap rock: இடைப்பாறை: மிக உறுதியான, உழைக்கக் கூடிய பாறை: வெட்டி எடுப்பது கடினம். சாலைகள் அமைக்கவும், ரயில் தண்டவாளங்களுக்குத் தளமாகவும் பயன்படுவது

trass: பூச்சுக்கலவை: (குழை.)ஒரு வகையான சாம்பல், மஞ்சள் அல்லது வெண்மை நிறமண், எரிமலைகள் உள்ள பகுதிகளில் சாதாரணமாகக் காணப்படுவது. நீருக்கடியில் நன்கு கெட்டிப்படுகிற சிமென்ட் தயாரிப்புக்குப் பயன்படுவது

traveling crane: (வார்) நகரும் பளுத்தூக்கி: நீராவி அல்லது மின்சாரத்தால் இயங்கும் பளுத்தூக்கி. இது நெடுக்காகவும் குறுக்காகவும் செல்லக் கூடியது.பெர்துவில் மேலி ருந்து தூக்குகின்ற வகையைச் சேர்ந்தது. இதன். அடிப்பகுதி குறுக்குத் தண்டு மீது அமைந்தது. இத்தண்டின் முனைகள் இணை அமைந்த தண்டவாளங்கள் மீது உட்கார்ந்திருக்கும்

treacle stage: டிரேசில் ஸ்டேஜ்: (குழை.) வெப்பமாக்கப்பட்ட பின் குளிர்ந்ததும் கெட்டியா கின்ற பிசின் திரவ நிலையில் இருப்பது

tread: படித்தரை: கட்டுமானபடியின் சமதரையான பகுதி. படி யேறுகையில் பாதங்களை வைக்கும் பகுதி

treadle: (எந்) மிதித்தியக்கும் காலால் இயக்குகின்ற எந்திரத்தின் பகுதி

trefoil: மூமட்ட (க.க.) ஒன்றிணைந்த மூவட்ட அலங்காரப் பகுதி

treillage: (க.க.) பந்தல்: கொடிகள் படர்ந்து அமைவதற்காகப் போடப்படும் பந்தல்

trellis (க.க.) பின்னல் தட்டி: குறுக்குக் கம்பிப் பின்னல் அமைவு. தாவரங்களுக்கும் மலர் களுக்கும் ஆதாரமாக இது பயன்படுத்தப்படுகிறது

trench: நெடும்பள்ளம்: (பல நெடும் பள்ளம்) குழாய்களைப் புதைப்பது போன்று தரையில் அமைக்கப்படுகிற நீண்ட குறுகிய பள்ளம்

trend: நிலவரம்: பொதுவான போக்கு

tre-pan: (எந்.) ஒரு துளையைச் சுற்றி வட்டமான குழிவை வெட்டுதல்

T rest: டி.ரெஸ்ட்: மரவேலை லேத் எந்திரத்தில் வேலைக் கருவிக்கான தாங்கு நிலை. பணி செய்ய வேண்டிய பொருளை தேய்ப்புச் சக்கரம் கொண்டு வேலை செய்வதற்கும் தாங்கு நிலை

trestle: நாற்கால் தாங்கி: கீழ் நோக்கி சரிவாக அமைந்த நான்கு கால்கள் மீது அமைந்த உத்தரம். இவ்விதமான இரண்டைப் பக்கம் பக்கமாக வைத்து அவற்றின் மீது ஒரு பலகை அமைக்கலாம். பள்ளம் அல்லது குழிவின் மீது இவ் விதக் கட்டுமானத்தை அமைத்து அதன் மீது சாலை அல்லது ரயில் பாதை போடலாம். (இருக்கை) இவ்விதக் கட்டடத்தின் மீது பலகை அமைத்து மேசையாக்கலாம். (மெத்தை) அகன்ற மேல் பகுதி யைக் கொண்ட அறுப்பதற்கான தாங்கு தூண். வெளிமுனைகளில் திண்டு வைக்கப்பட்டது

trest'e table: (வரை) நாற்கால் தாங்கி மேசை: நாற்கால் தாங்கி மீது வரைவதற்காக அமைக்கப்பட்ட பெரிய பலகை

triangle: முக்கோணம்: மூன்று புறங்களையும் மூன்று உள்கோணங்களையும் கொண்ட வடிவம். செங்கோணத்தில் ஒரு