பக்கம்:அழியா அழகு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} } 0 அழியா அழகு

என்று தொடங்குகிறது அவனுடைய சீற்றக் குமுறல், பரதனுக்கும் குகனுக்கும் கேர் முகமான பகை யாதும் இல்லை. இராமன் என்னும் கண்ணுடி வழியே பார்க் கும் கிலே வந்த பிறகு இராமனுக்குப் பகைவகைத் தோற்றிய பரதன் அவனுக்கும் பகைவளுகிருன். அதல்ை பரதனேக் கண்டவுடன் குகனுக்கு இராமன் வினவுதான் வருகிறது: இராமன் கினைவோடே உலகம் முழுவதையும் பார்க்கும் வகையில் குகன் மாறியிருக்கிருன் அல்லவா? ஆதலின் இராமனே முதலில் வினைக்கிருன் அவனுடைய அஞ்சன வண்ணத் திருமேனியில் ஈடுபட்டவன் ஆதலின் அந்த அழகை கினேக்கிருன். அவனிடம் இப்போது, தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் சமர்ப்பித்தவன் குகன், இராமன் அயோத்திக்கு காயகன். உலகுக்கு நாயகன். குகனுடைய ஆருயிர்க்கு நாயகன். அந்த நாயகன் அல்லவா ஆளவேண்டும்? என்ன நேர்மை அற்ற கிலே அவன் ஆளவில்லே. அவன் ஆளாமல் நாட்டைக் கைவிட்டதற்குக் காரணம் என்ன? போரிலே வென்ருே, இரந்தோ பெருமல் வஞ்சனேயால் ஒருவன் அதைப் பெற்றுக்கொண்டான். சீ! அவனும் ஒரு மன்னன? இப்படி எண்ணும்போது அவ லுடைய பேச்சில் இழிவு தொனிக்கிறது. மரியாதை யாகச் சொல்லும் வார்த்தையைச் சில சமயங்களில் அதற்கு உரியவர் அல்லாதவர்களிடத்தும் கோபத்தால் சொல்வது உலக இயல்பு. பள்ளிக்கடம் போகாமல் அலேந்து திரிந்துவிட்டு மாலையில் பையன் வீட்டுககு வந்தால், "பெரியவர் ஊரெல்லாம் சுற்றிவிட்டு வருகிருர்' என்று தங்தை சொல்கிருர். அது மரியாதைப் பேச்சா? அந்த மரியாதை யுருவத்தில் கோபம் குமுறுகிறது.

குகன் பரதனைப்பற்றி அவ்வாறுதான் பேசுகிருன்.

"வஞ்சனே பால் அர செய்திய

மன்னரும் வந்தாரே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/118&oldid=523320" இலிருந்து மீள்விக்கப்பட்டது