பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ெரோ கான்ஸ்ாடியன் 71 அவன் விழிப்படைந்தான். கண்களைத் திறந்ததும், சூரியனின் முதல் கிரணங்கள் சன்னலுக்குள் எட்டிப்பார்ப்பதைக் கண்டு வியப்புற்ருன். 'நவசார்த்! ஏ நவசார்த்!’ என்று பக்கத்து வீட்டுக்காரி கூப்பிட்டாள். அவன் வீட்டைவிட்டு வெளியே பாய்ந்தான். அடுத்த வீட்டுக்காரி வேலிக்கு மேலாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். 'இன்று எப்படி நீ இவ்வளவு நேரம் துரங்கிவிட்டாய்?’ என்று கேட்டாள். 'என்ன, அர்ஷாக் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிருளு?’’ 'இல்லை’ என்று கூறி அவள் தலையை ஆட்டினள். 'உன் அர்ஷாக் ஊரைவிட்டுப் போகிருன். ரஸ்தாவைப் பாரேன்.' கூரை இடிந்து தலைமீது விழுந்தது போன்ற உணர்வு நவசார்துக்கு ஏற்பட்டது. அவன் தணிவான தொழுவத்துக்கு ஓடி, கூரைக்கு ஏறிஞன். அர்ஷாக்கின் கார் சாலையின் வழியே, சூரிய ஒளியில், பளபளத்துக்கொண்டு விரைந்தது. சிறிதாகிச் சிறிதாகி சீக்கிரத்தில் மறைந்தது. நிதானமற்ற அவனது நடை ஒரு கிழவனுக்கு உரியதுதான். நவசார்த் பழத்தோட்டங்களைநோக்கிச் சென்ற பாதையில் தன் வழியே இறங்கி நடந்தான். தரையையே பார்த்த அவன் கண்கள் குழிக்குள் ஆழ்ந்தவையாய் தோன்றின. அவனது முதுகு முன்னை விட அதிகம் குனிந்து காணப்பட்டது. வெண்ணிற ஆட்டுக்குட்டி அவனுக்குப் பின்னல் துள்ளி ஓடியது.