பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிக் அவாகியன் (1919) தென்பிராந்திய ஜூரம் ஆயிரம் வருஷங்கள் ஆலுைம்கூடத் தென்பிரதேச மக்கள் கிழவேட்டைக்காரன் பாபெஹை நினைவு வைத்திருப்பார்கள். ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகும், பாப்பி வயல்களிலிருந்து திரும்பி வருகிற, வெயிலில் காய்ந்து களைத்துப்போன விவசாயி கள் அந்தக் குன்றின் சரிவு மீது நின்று, பாபெஹைப்பற்றித் தங்கள் மூதாதையர் பின்னியிருக்கும் கதைகளே நினைவுகூர்வர். கிழவன் சொன்னதை நான் நினைத்துக்கொள்கிறேன் : 'நான் மூன்று முறை கீழே இறங்கி, நாணல் காட்டினுள் போனேன். ஆனல், புலிகளைத் தேடி அல்ல. அங்கே வெகு தூரத்தில் ஒரு இடத்தில் நீரூற்று ஒன்று இருக்கிறது; அதன் நீர் ஆகாய நீல நிறத்தில் இருக்கும் என்று என் தந்தை என்னிடம் சொல்வது வழக்கம். அந்த நீரூற்றைக் கண்டுபிடிக்க நான் ஆசைப்பட்டேன்.” - நாங்கள் மெதுவாகச் சிரிப்போம். ஏனெனில் பாபெஹ் ரொம்ப முதியவன். பாபெஹ் அவனது வாழ்நாளில் அந்த நீரூற்றைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், நொறுங்கிப்போன அவனது மிச்ச சொச்சங்களை நாங்கள் கண்டோம். அவற்றை எடுத்து வந்து இங்கே குன்றின் சரிவில் புதைத்தோம், பாபெஹாக்குப் பிறகு, கிராமத்தில் சாய்ஃபி எனப் பெயர் கொண்ட மூன்று சகோதரர்கள் தோன்றினர்கள். அவர்களில் மூத்தவன் பெயர் வாலி-வாலி சாய்ஃபி, அவன், வரிசையாகச் சென்ற அமெரிக்க லாரிகளைக் கொள்ளையடித்து வருவதற்காகத் தன் சகோதரர்கள் இருவரையும் அனுப்பினன். ஆனால், நாங்கள் கிராமத்திலேயே இருந்தோம். அவன் ஒரு அமெரிக்கனுக்கு நாற்பது புட்டி பேரீச்சை மதுவும், நாற்பது கிலோகிராம் கஞ்சாவும் கொடுத்து, பதிலுக்கு ஒரு சாதாத் துப்பாக்கியும் ஒரு பெட்டி நிறையத் தோட்டாக்களும் பெற்றுக்கொண்டான் என்று ஜனங்கள் சொன்னர்கள். அவன் நாணல் காட்டுக்கு வழக்க மாகப் போவான். பாபெஹ் போல அவன் கீழே இறங்கி நாணல்