பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிக் அவாகியன் 83 கண்டுபிடிக்கப் போகிறேன். உ. ங் க ளு க் கு பாபெஹைத் தெரியுமா?’ என்றேன். குடியானவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். வருத்த மாய்ச் சிரித்தார்கள். பாப்பி வயல்களை நோக்கிச் சரிவின் மேலேறி நகர்ந்தார்கள். சூரியன் இப்போதுதான் மலைச் சிகரங்களுக்கு மேலே தலே காட்டியது. நாணல் காடு பொன்மயமாக மாறியது. ஆ கடவுளே, என்ன பிரகாசம்! சூரியனைவிடச் சிறந்தது; சூரியனைப் பார்க்கிலும் அதிகப் பிரகாசம் கொண்டிருந்தது அது! நாணல்களை விலக்கிக்கொண்டு நான் முன்சென்றேன். நான் திரும்ப வேண்டிய வழி அடியோடு தவறிவிட்டது என்று எண்ணிக் கொண்டேன். நீரூற்றைக் காண்பது வரையில், எவ்வளவு தூரம் கடந்துவிட்டேன் என்று நான் அறியேன். அது நேர்த்தியாக இருந்தது. தண்ணிர் கனமாய், நீலநிறமாக, நுரையின்றி இருந்தது. நான் அதன் அருகில் அமர்ந்து, பாபெஹை நினைத் தேன். தண்ணிர்க் குளுமையின் அழகை ரசிப்பதற்காக நான் வெகுநேரம் அங்குத் தங்கியிருந்தேன். திடீரென நாணல்கள் சலசலக்கத் தொடங்கின. என் புறங்கழுத்தில் வெப்பமான மூச்சுப் பட்டதை நான் உணர்ந்தேன். எங்கள் உலகத்துக்கு உன் வருகை நல்வரவு ஆகட்டும், ஆயிரம் நல்வரவு உனக்கு’ என்று ஒரு களைத்துப்போன குரல் கூறியது. நான் உலர்ந்த புல்லின்மேல் வைத்திருந்த துப்பாக்கியை எடுக்கக் கையை நீட்டினேன். சுடு! கொல்லு! எங்கள் தோல்களைத் தோளில் வை, போ! ஜனங்கள் மத்தியில் பெருமையாய் நட!’ பேசியது ஒரு கிழட்டுப் புலி. உலகத்திலேயே மிகவும் கிழடான புலி அதுவாகவே இருக்கலாம். துப்பாக்கிக் கட்டையி லிருந்து அது எப்படித் தனது பாதத்தை அகற்றிவிட்டு என்னேப் பார்த்து நின்றது என்று நான் கண்டேன். 'என்ன மனிதன் அந்த வாலி சாய்ஃபி? எப்படிப்பட்ட மனிதன் அவன்?' என்று புலி கேட்டது. அது தனியாக இல்லை. எங்களைச் சுற்றியிருந்த நாணல்களின் பின்னல் மேலும் அநேக புலிகள் காத்திருந்தன என்பதை நான் கவனித்தேன். 'அவன் தன் இரண்டு சகோதரர்களையும் அமெரிக்க லாரிகளைக் கொள்ளையிடுவதற்காக அனுப்பியவன். ஒரு துப்பாக்கி