பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 தென்பிராந்திய ஜுரம் அவள் தன் சிங்கார ஆடையை அகற்றிவிட்டு அம்மணமாக என் முன் நின்ருள். 'ஐயா, வாலி என்ன என்ன பாடு படுத்தியிருக்கிருர், பாருங்கள்.” அந்த அழகிய பெண்ணை அவன் தகர்த்து நொறுக்கி, வெறுமனே உயிரோடு மட்டும் விட்டுவைத்திருந்தான். 'நாளே விடியற்காலை நாம் அவனே அகற்றிவிடுவோம்' என்றேன். வாலி சாய்ஃபி துப்பாக்கி தோளில் தொங்க வீடு வந்து சேர்ந்தான். அம்மணமாய் நின்ற மனைவியையும், சோபாவில் படுத்திருந்த என்னையும் அவன் தன் மீசையினுடாகப் பார்த் தான். 'வாருங்கள், ஐயா. நீங்கள் உங்கள் வீடு மாதிரி நினைத்து எல்லாச் சவுகரியங்களையும் அனுபவியுங்கள். இப்போது நாம் ஜின் குடிப்போம்’ என்ருன் . ஆகவே நாங்கள் குடிக்க ஆரம்பித்தோம். நான்காம் முறை குடித்தபிறகு நான் சொன்னேன்: 'வாலி, பொன்னிறப் புவி ஒன்று நாணல் காட்டில் வந்திருக்கிறது. பலபேர் அதைப் பார்த்திருக்கிரு.ர்கள். அதன் தோலுக்கு இருபத்தையாயிரம் தருவதாக அமெரிக்கன் கர்னல் அறிவித் திருக்கிரு.ர். நீ என்ன சொல்கிருய்?’’ வாலி சாய்ஃபி உற்சாக வெறியில் கத்தின்ை. "நாம் நாளைக்கே அதிகாலையில் போவோம் ஐயா. ஏய் சோனி, இன்னும் ஜின் கொண்டு வா...! இருபத்தையாயிரம்! அது தீர்ந்தது' நான் அந்தக் கிழட்டுப் புவியையும், நாணல்களின் பின்ன லிருந்து வந்த துயரம் நிறைந்த புலிகளையும் எண்ணிக் கொண்டேன். அவை அனைத்தும், 'வாலி சாய்ஃபியை இங்கே கூட்டி வா!' என்ற அர்த்தத்தில் ம்ர்ர்.ர்.ர்’ என்று குரல் கொடுத்தன. சோனி இப்போது வேருெரு சிங்கார ஆடையில்ை தனது காயங்களே மூடி மறைத்து, உதயவேளைக்காகக் காத்திருந்தாள். அடிவானம் வெளுக்கத் தொடங்கியதும், வாலி மூன்ருவது காலி பாட்டிலே வெளியே எறிந்துவிட்டுச் சொன்னன்: - 'நாம் போவோம், ஐயா.’’