பக்கம்:ஆர்மேனியன் சிறுகதைகள் (மொழிபெயர்ப்பு).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராபேல் ஆராம்யன் 9 I என்று நான் சட்டென உணர்ந்தேன். நான் அழகில்லாதவன் என்ற நினைப்பு எனக்கு வந்தது. அதனுல்தான் அவள் என்னே விரும்பக்கூடும் என்ற எண்ணம் எனக்கு எழவேயில்லை. ஒ, அப்படிப்பட்ட ஒரு எண்ணம் என் மண்டைக்குள் ஒருபோதும் புகாது. பெண்கள் ஏன்தான் ஆணின் தோற்றத்தில் அவ்வளவு கவனம் செலுத்துகிருர்களோ என்று நான் அடிக்கடி அதிசயித் தாலும்கூட! - 'நான் உலகம் பூராவும் சுற்றியிருக்கிறேன். எல்லாவித நகரங்களுக்கும் போயிருக்கிறேன். அங்கெல்லாம் எனக்கு நண்பர்கள் இருக்கிருர்களே! அது உங்களுக்குத் தெரியுமா?’’ என்று சிறுவன் பெருமையாகச் சொன்னன், - "சரிதான்' என்றேன். நான் என் குழந்தைப் பருவத்தை நினைத்துக்கொண்டேன். நான் படித்த நாடுகளையும் நகரங் களையும்பற்றிய கதைகளை என் பள்ளித் தோழர்களிடம் சொல்வது வழக்கம். ஆனல் அவர்களோ, "நீயே கற்பனை பண்ணிச் சொல்கிருய்' என்றுதான் கூறுவர். நான் வீட்டுக்கு வந்து அழுவேன். இனி வேறு எதையும் அவர்களிடம் சொல்வ தில்லை என்று தீர்மானிப்பேன். ஆயினும், மறுநாள் எல்லாம் திரும்பவும் நிகழும். என்ளுேடு படித்தவர்களில் ஒருவன் பிற்காலத்தில் ஒரு பெரிய கப்பலின் தலைவன் ஆளுன். இன்னொருவன் விஞ்ஞானியானன். மூன்ருமவன் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை அதிகாரியானன். நானே-ஒரு லாரி டிரைவர். ஒரு சமயம் அவர்களில் ஒருவனை நான் வீதியில் சந்தித்தேன். அவன் தயவுகாட்டிப் புன்னகை புரிந்தான். 'நல்லது, கனவு காண்பவனே! வாழ்க்கை உன் விஷயத்தில் எப்படி இருக்கிறது? அன்ருெரு நாள் நாங்கள் பலரும் கூடியிருந் தோம். உன்னைப்பற்றிப் பேசினேம்’ என்ருன். என்னைப்பற்றிப் பேசினீர்களாக்கும்; என்னை அழைக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கவே இல்லையே என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். - 'இந்த நகரங்களுக்கெல்லாம் நான் போயிருக்கிறேன்’ என்று சிறுவன் சொன்னதை நான் கேட்டேன். படத்தில் அவன் சுட்டிக்காட்டுவதைப் பார்த்தேன். '"நான் அங்கே போயிருக் கிறேன். எனக்கு அங்கு நண்பர்கள் இருக்கிருர்கள். நான் அங்கே வந்து அவர்களைப் பார்க்கவேண்டும் என்று அவர்கள் காத்திருக் கிருர்கள். 'படிப்பதற்கு இருக்கிற பயண நூல்கள் அனைத்தையும் அவன் படித்துவிட்டான்' என்று அவன் தாய், என் பெயரைத்